எம்மில் பலரும் முதுகு வலியால் அவதிக்குள்ளாகிறார்கள். அதே தருணத்தில் முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து எம்மில் பலருக்கும் முழுமையான விழிப்புணர்வு இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு வலுவின்மை காரணமாக முதுகு வலி ஏற்படுகிறது. சிலருக்கு தொற்றுகள் காரணமாகவும், முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் தீங்கற்ற மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய கட்டிகளாலும் முதுகு வலி ஏற்படுகிறது.
இவை எல்லாம் மிக குறைவானவர்களுக்கே ஏற்படுகிறது. ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு டிஜெனரேட் டிஸ்க் டிஸீஸ் எனப்படும் முதுகுத்தண்டில் உள்ள இரண்டு எலும்புகளுக்கு இடையே உள்ள சவ்வு தேய்மானம் அடைவதால் முதுகு வலி ஏற்படுகிறது.
இது வயது ஆக ஆக இயல்பாக ஏற்படும் ஒரு அமைப்பு என்றாலும், தற்போதுள்ள சூழலில் இளம் வயதினருக்கும் இத்தகைய பாதிப்பால் முதுகு வலி உண்டாகிறது.
சத்தற்ற ஆகாரம், உட்காரும்போதும் பணியினை செய்யும்போதும் சரியான முறையில் உட்காராமல் எம்முடைய சௌகரியத்துக்கு ஏற்ற வகையில் உட்கார்ந்து பணியாற்றுவது, உடல் உழைப்பின்மை, புகைபிடித்தல், வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் அலுவலக விருந்தில் பங்குபற்றி இயல்பான அளவை விட அதிக அளவுக்கு மது அருந்துதல் போன்ற காரணங்களால் முதுகு வலி ஏற்படுகிறது.
மேலும், இன்றைய தகவல் தொழில்நுட்ப சூழலில் கைகளில் கைபேசியை வைத்துக்கொண்டு தலைகுனிந்தவாறு மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வரை ஏதேனும் ஒரு விடயத்தை கண்களால் பார்த்துக்கொண்டிருப்பது, மடிக்கணினியில் பணியாற்றும்போது அதற்கேற்ற முறையில் அமர்ந்து பணியாற்றாமல், படுத்தவாறோ அல்லது சாய்ந்தவாறோ பணியாற்றுவது... இத்தகைய காரணங்களாலும் முதுகு வலி உண்டாகிறது.
முதுகு வலி என்ற உடன் உடற்பயிற்சி செய்தால் நிவாரணம் கிடைத்துவிடும் என்று உடற்பயிற்சி மேற்கொள்ளாமல், மருத்துவரை சந்தித்து முதுகுவலிக்கான காரணத்தை துல்லியமாக அவதானிக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் பரிந்துரைக்கும் மருந்தியல் சிகிச்சை, சத்திர சிகிச்சை, இயன் முறை சிகிச்சை, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டால் முதுகு வலியிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெறலாம்.
டொக்டர் ராஜ் கண்ணா
தொகுப்பு : அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM