இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையயே தொடர்ந்து யுத்தம் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக காசா மற்றும் மேற்குக் கரையில் இருந்து இஸ்ரேலுக்குள் தொழிலாளர்களின் வருகை தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி மனித கடத்தலில் ஈடுப்படும் கும்பல் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தொழிலாளர்களை அனுப்புவதன் மூலம் வருமானம் பெற முயற்சிக்கின்றனர். இந்நிலையில், இஸ்ரேலிற்குள் நுழைய முயன்ற 50 இலங்கையர்கள் ஜோர்தானில் சிக்குண்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இஸ்ரேலுக்கு ஜோர்தான், யேமன் மற்றும் எகிப்தில் உள்ள கெய்ரோ போன்ற இடங்கள் ஊடாக மக்கள் கடத்தப்படுகிறார்கள்.
சில இலங்கையர்கள் இஸ்ரேலில் சிறந்த ஊதியம் பெறும் வேலைக்காக கடத்தல்காரர்களுக்கு 2.5 மில்லியன் ரூபா வரை பணம் கொடுக்கிறார்கள்.
இஸ்ரேலுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் சட்டவிரோதமாக வேலைக்கு 800- 1000 இலங்கையர்கள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக காசா மற்றும் மேற்குக் கரையில் இருந்து பாலஸ்தீன தொழிலாளர்களை அழைத்து வருவது தற்போது கடினமாக உள்ளது. இதனை மனிதக் கடத்தல்காரர்கள் அதிக வாய்ப்பாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.
இதில் சிக்கும் பெண்கள் பயணிக்கும் வழியில் கடத்தல்காரர்களினால் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள்.
குறித்த கடத்தல் கும்பல்கள் இலங்கையில் உள்ள தங்கள் முகவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். உள்ளூர் முகவர்கள் சட்டவிரோதமாக வேலை தேடுபவர்களுக்கு ஆவணங்களையும் தயார் செய்கிறார்கள்.
அவர்கள் ஒரு பகுதியாக கட்டணம் வசூலிக்கிறார்கள் பின்பு முழு கட்டணம் செலுத்தப்பட்டவுடன் கடவுச்சீட்டை வெளியிடுகிறார்கள்.
அண்மையில் ஜோர்தான் எல்லை ஊடாக சட்டவிரோதமாக பிரவேசித்த இரு இலங்கையர்கள் இஸ்ரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM