யாழ். ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு கொடுக்க அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்ப்பு

Published By: Digital Desk 3

16 Oct, 2023 | 01:10 PM
image

யாழ்ப்பாணம் - கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கீரிமலை காங்கேசன்துறை வீதியில் உள்ள அரச மாளிகையும் அச்சுற்றாடலில் அழிக்கப்பட்ட சைவ ஆலயங்கள் மடங்கள் தொடர்பாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு திருமுருகன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலை ஆதிச்சிவன் கோயில், சடையம்மா மடம், உச்சிப்பிள்ளையார் கோவில் போன்றவை இடிக்கப்பட்டு அச்சுற்றாடலில் கட்டப்பட்ட அரச அதிபர் மாளிகையாகவும் பயனற்றுள்ளது.

இவ் அரச மாளிகையை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அல்லது இந்து சமயம் சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். ஆதிச்சிவன் கோயில் மடங்கள் இருந்த இடத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதை விடுத்து தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் இவற்றை ஒப்படைக்க கூடாது. இது தனியார் நிலங்களிலும் சைவ சமய நிறுவனங்களின் நிலங்களிலும் போரை பயன்படுத்தி கட்டப்பட்டது.

கடந்த முப்பத்துமூன்று ஆண்டுகளுக்கு மேலாக உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் பொதுமக்கள் போகமுடியாமல் கடற்படையின் பொறுப்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது மிக வேதனையான விடயம்.

இப்பகுதியில் இருந்த சித்தர்களின் சமாதிகள் பல உடைக்கப்பட்டு விட்டன. இது நாட்டுக்கு கெடுதியானவை. எனவே இவற்றை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தென்னிலங்கை சார்ந்த வாணிப நிறுவனங்களுக்கு கையளிக்க கூடாது. 

இது திட்டமிட்ட அநியாய செயற்பாடு. இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

காங்கேசன்துறை பலாலி வீதியில் சிவபூமி அறக்கட்டளைக்கு உரித்தான சுக்கிரவார திருகோணசத்திரம் இராணுவ நலன்புரிச்சங்கம் இயங்குகின்ற தல்செவன ஹோட்டல் தமது பயன்பாட்டிற்கு வைத்துள்ளார்கள்.

நூற்றியாறு பரப்பு கொண்ட சைவ சமய நிறுவனத்தின் மடத்தை அழித்து ஹோட்டல் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இது நீதியற்ற செயல் உடனடியாக தல்செவன ஹோட்டலின் பயன்பாட்டில் உள்ள சமய நிறுவனத்தின் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும் - என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-08-11 06:15:18
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு நீதித்துறைக்கு மரண...

2026-08-11 06:13:40
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்புக்கு எதிராக பாடலி...

2026-08-11 06:10:23
news-image

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்...

2026-08-11 05:27:31
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது நாட்டுக்கு...

2026-08-10 14:02:40
news-image

அரசாங்கம் பொலிஸாரை அரசியல் தேவைக்காகப் பயன்படுத்துகிறது...

2026-08-10 16:44:28
news-image

சாகர காரியவசம் கைது செய்யப்படுவார் என...

2026-08-10 17:22:21
news-image

நீர்க்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் உண்மையான பின்னணியை...

2026-08-10 16:53:32
news-image

உயிர்த் தியாகம் செய்தேனும் 22ஆம் திருத்தத்தை...

2026-08-10 17:23:58
news-image

பிரதம நீதியரசருக்கு எதிராக அவதூறு ;...

2026-08-10 19:09:00
news-image

மலேசியாவில் கைது செய்யப்பட்ட 'சிவப்பு எச்சரிக்கை'...

2026-08-10 20:53:37
news-image

போதைப்பொருள் பரிசோதனைக்கு  அதிநவீன நடமாடும் ஆய்வுகூட...

2026-08-10 20:52:11