வவுனியா - மறவன்குளம் பகுதியில் நேற்று (15) காலை எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சியினை மேற்கொண்ட நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

நேற்று காலை குறித்த சிறுமி வீட்டின் பின்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியிலுள்ள 45 யதுடைய நபர் ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றதை அவரது சகோதரன் பார்வையிட்டுள்ளார்.

இதையடுத்து அயலவர்களின் உதவியுடன் குறித்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.