கொழும்பு ஆனந்தா மற்றும் நாலந்தா கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகிள்ளதோடு, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்களில்  10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து மாணவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

10 மாணவர்களை நேற்று மாலை மாலிகாகந்த மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு மாணவர்கள் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலருடம் மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐந்து மாணவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு அருகில் நேற்று ஆனந்தா மற்றும் நாலந்தா மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த எட்டு மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் முடிவடைந்து வீடு திரும்பினர்.

 குறித்த மோதல் காரணமாக இரண்டு பஸ்கள், கார் மற்றும் வேன் ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.