டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக விவசாயத்தை மேம்படுத்தலுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

15 Oct, 2023 | 02:03 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்கொள்ளப்படும் பணிகளில் ஒன்று விவசாயத்துறையில் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கத்துக்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான மென்பொருளை அறிமுகப்படுத்துவதாகும்.

விவசாயத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக ஏழு அமைச்சுக்களிடமிருந்து உரிய தரவுகள் பெறப்பட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. புதிய மென்பொருள், உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் விளைச்சலை நேரடியாக அளவிடுவதற்கும், கிடைக்கும் விளைச்சலைப் பாதுகாப்பதற்கும் தேவையான வழிகாட்டுதலை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டமாகவும் இது அமையும்.

இலங்கையின் விவசாய அபிவிருத்திக்காக 250 மில்லியன் டொலர்கள் மானியமாக இத்திட்டத்தின் மூலம் பெறப்பட்டு விவசாயத் துறையில் தரவுகளை சேகரித்து நெல் மற்றும் ஏனைய பயிர்களின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் ஆயரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 

2024-06-16 12:14:49
news-image

இசை நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் கூரிய...

2024-06-16 12:07:45
news-image

யாழில் மைதானத்துக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதலில்...

2024-06-16 11:52:25
news-image

வாடகை வீட்டில் வசிப்போரிடமிருந்தும் வரி அறவிட...

2024-06-16 12:20:10
news-image

கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த...

2024-06-16 12:06:06
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய...

2024-06-16 11:26:58
news-image

ரயிலில் பயணித்த உக்ரைன் யுவதி ரயில்...

2024-06-16 11:13:55
news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16