தேர்­தலை பிற்­போட புதிய உத்­தியா?

Published By: Vishnu

15 Oct, 2023 | 01:52 PM
image

சத்­ரியன்

ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களை நடத்­தாமல் பிற்­போ­டு­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மி­டு­கி­றது என்று எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச வெளி­யிட்ட அறிக்கை, அவர் கன­வு­லகில் இருக்­கி­றாரா என சிலரின் நகைப்­புக்­குள்­ளா­கி­யது.

அடுத்த ஆண்டு இறு­தியில் ஜனா­தி­பதித் தேர்­த­லையும், அதற்கு அடுத்த ஆண்டில் பாரா­ளு­மன்றத் தேர்­த­லையும் நடத்த வேண்டும்.

இந்த இரண்டு தேர்­தல்­க­ளையும் பிற்­போ­டு­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள் கிடை­யாது.

ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு  முன்­ன­தாக, புதிய ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்று ஜனா­தி­பதி தேர்தல் சட்டம் தெளி­வாக கூறி­யி­ருக்­கி­றது.

சஜித் பிரே­ம­தாச இந்த அறிக்­கையை வெளி­யி­டு­வ­தற்கு முந்­திய வாரம், பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் செய்­தி­யாளர் சந்­திப்பு ஒன்றில், வெளி­யிட்­டி­ருந்த கருத்தும், சஜித் பிரே­ம­தா­சவின் கருத்தை ஒட்­டி­ய­தாகத் தான் இருந்­தது.

கோட்­டா­பய ராஜபக் ஷவுக்கு வழங்­கப்­பட்ட மக்­க­ளா­ணையின் மூலம், ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால், மேல­தி­க­மாக ஒரு நாள் கூட பத­வியில் இருக்க முடி­யாது, அவ்­வாறு இருந்தால் அது அர­சியல் சட்­ட­மீறல் என்று அவர் கூறி­யி­ருந்தார்.

பாரா­ளு­மன்­றத்தின் பத­விக்­காலம் முடிந்த பின்னர் அதற்கு ஆயுள் இருக்­காது, தற்­போ­தைய உறுப்­பி­னர்­களின் பத­விகள் தானா­கவே காலா­வ­தி­யாகி விடும்.

அவ்­வா­றி­ருக்க, தேர்­தல்­களை நடத்­தாமல் விடு­வது எப்­படி, அதற்கு சட்டம் இடம் கொடுக்­குமா என்­றெல்லாம் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டன.

ஆனால், சஜித் பிரே­ம­தாச இந்த அறிக்­கையை கண்­மூ­டித்­த­ன­மாக வெளி­யிட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

ஜனா­தி­பதி தேர்­த­லையோ பாரா­ளு­மன்றத் தேர்­த­லையோ நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தயங்­கு­கி­றது என்­பது வெளிப்­ப­டை­யா­கவே தெரி­கி­றது.

அடுத்த ஆண்டில் தேர்­தலை நடத்­தினால் பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­படும் என்று ஐ.தே.­கவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வஜிர அபே­வர்­தன அண்­மையில், எச்­ச­ரித்­தி­ருந்தார்.

பொரு­ளா­தார நெருக்­க­டியைக் காரணம் காட்டி தேர்­தலை ஒத்­திப்­போ­டு­வது அர­சாங்­கத்தின் உத்­தி­யாக இருக்­கலாம் என்ற சந்­தே­கங்கள் அப்­போதே தோன்­றி­யி­ருந்­தன.

ஏற்­கெ­னவே உள்­ளூ­ராட்சித் தேர்­தலை, நடத்த முடி­யாத நிலையை அர­சாங்கம் இவ்­வாறு தான் உரு­வாக்­கி­யது.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலை அறி­வித்து நடத்­து­கின்ற அதி­கா­ரங்­களை தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவே கொண்­டி­ருக்­கி­றது.

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான அறி­விப்பை வெளி­யிட்டு, வேட்­பு­ம­னுக்­க­ளையும் ஏற்றுக் கொண்ட போதும், தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வினால், அந்த தேர்­தல்­களை நடத்த முடி­ய­வில்லை.

தேர்­த­லுக்குத் தேவை­யான நிதியை அர­சாங்கம் ஒதுக்கத் தவ­றி­யதால் உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்த முடி­ய­வில்லை என்று அறி­வித்து விட்டு தேர்தல் ஆணைக்­குழு ஒதுங்கிக் கொண்­டது.

இலங்­கையின் வர­லாற்றில் தேர்தல் ஆணைக்­குழு அல்­லது தேர்­தல்கள் ஆணை­யா­ள­ருக்கு இவ்­வா­றான நிலை ஏற்­பட்­டது இதுவே முதல் முறை.

தேர்தல் ஆணைக்­கு­ழுவை சுயா­தீ­ன­மா­ன­தாக உரு­வாக்­கிய போதும், அதற்­கென நிதி அதி­காரம் வழங்­கப்­ப­டா­தது தான் இந்த நிலைக்­கான காரணம்.

இதே கார­ணத்தைக் கொண்டு ஜனா­தி­பதி தேர்­த­லையோ, பாரா­ளு­மன்றத் தேர்­த­லையோ நடத்த முடி­யாத நிலையை அர­சாங்­கத்­தினால் உரு­வாக்க முடியும்.

அதற்­கான வாய்ப்­புகள் குறைவு, அது அர­சாங்­கத்­துக்கு நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்தும் என்­றாலும், அவ்­வா­றா­ன­தொரு வாய்ப்பு முற்­றி­லு­மாக இல்லை என்று கூற­மு­டி­யாது.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் விட­யத்தில் அது நடந்­தி­ருக்­கி­றது.

எவ்­வா­றா­யினும், நிதியை முடக்கி அர­சாங்கம் ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்த முடி­யாத நிலையை உரு­வாக்­கினால், அது உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் அர­சாங்­கத்­துக்கு கடும் நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்தும்.

உள்­நாட்டில் போராட்­டங்கள் மற்றும் குழப்­பங்கள் உரு­வா­கவும் கார­ண­மாக அமையும்.

‘அர­க­லய’ போன்ற இன்­னொரு போராட்டம் வெடித்­தாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை.

தேர்­தலை அர­சாங்கம் உரிய நேரத்தில் நடத்­தாது போனால் - மக்­க­ளுடன் வீதியில் இறங்கிப் போரா­டுவோம் என்றும், அர­க­லய போன்று அந்த போராட்டம் இருக்கும் என்றும் ஜே.வி.பி. எச்­ச­ரித்­துள்­ளது.

எனவே, ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் கண்ணை திறந்து கொண்டு போய் படு­கு­ழிக்குள் விழாது.

அதே­வேளை பாரா­ளு­மன்ற, ஜனா­தி­பதி தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்கு அர­சாங்கம் இன்­னொரு வழியை தேர்ந்­தெ­டுக்கத் தயா­ரா­கி­றதா என்ற சந்­தே­கங்கள் பல­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அதுவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்­தினால் ஏற்­க­னவே கையா­ளப்­பட்ட ஒரு உத்தி தான்.

சட்­டத்­தி­ருத்­தங்­களை முன்­வைத்து, தற்­போ­தைய தேர்தல் முறையின் கீழ் தேர்­தலை நடத்த முடி­யாத நிலையை உரு­வாக்­கு­வது தான் அந்த உத்தி.

இதன் மூலம் புதிய சட்­டத்­தி­ருத்­தங்­களை  நிறை­வேற்­று­வ­தற்­கான காலத்தை இழுத்­த­டிப்­பதன் மூலம் தேர்­தலை நடத்­தாமல் தவிர்க்­கலாம்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக இருந்த நல்­லாட்சி அர­சாங்கம், மாகா­ண­சபைத் தேர்தல் முறை திருத்தச் சட்­டத்தை கொண்டு வந்­தது.

அதன் படி மாகா­ண­சபைத் தேர்­த­லுக்­கான தொகு­தி­களை எல்லை நிர்­ணயம் செய்ய வேண்டும். ஆனால், அந்த எல்லை நிர்­ணயம் இன்­னமும் முடி­ய­வில்லை.

அதனைக் காரணம் காட்­டியே இன்று வரை மாகா­ண­ச­பை­க­ளுக்கு தேர்­தலை நடத்த முடி­யாத நிலை உரு­வாக்­கப்­பட்­டது.

அந்த தேர்தல் திருத்தச் சட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் கணி­ச­மாக பங்­க­ளித்­தி­ருந்­தது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் சூழ்ச்­சியைப் புரிந்து கொள்­ளாமல், சம்­பந்தன்- சுமந்­திரன் ஆகியோர் அந்த நரித்­தந்­திர வலைக்குள் சிக்­கி­யி­ருந்­தனர்.

வடக்கு, கிழக்கு மாகா­ண­ ச­பை­க­ளுக்கு தேர்­தலை நடத்­து­மாறு இப்­போது தமிழ்க் கட்­சிகள் கோரு­கின்ற நிலைக்கு கார­ணமே, அவர்கள் அந்த கலைக்குள் சிக்கிக் கொண்­டதன் விளைவு தான். .

அதே­போன்­ற­தொரு உத்­தியை ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களைப் பிற்­போ­டு­வ­தற்கும் அர­சாங்­கத்­தினால் கையா­ளப்­ப­டலாம் என்ற ஊகங்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

பாரா­ளு­மன்­றத் தேர்தல் திருத்தச் சட்டம், ஜனா­தி­பதி முறைமை திருத்தம் போன்­ற­வற்றைக் கொண்டு வந்து இந்த இலக்கை அடை­வ­தற்கு அர­சாங்கம் முற்­ப­டு­வ­தா­கவும் சந்­தே­கங்கள் எழுந்­தி­ருக்­கின்­றன.

தற்­போது 196 உறுப்­பி­னர்கள் விகி­தா­சாரப் பிர­தி­நி­தித்­துவ முறை­யிலும், 29 உறுப்­பி­னர்கள் எத்­த­கைய நவீன தொழில்­நுட்ப புல­னாய்வு, கண்­கா­ணிப்பு வச­தி­களை இஸ்ரேல் கொண்­டி­ருந்­தாலும், அவை­யெல்­லா­வற்றின் கண்­க­ளிலும் மண்ணைத் தூவிக் கொண்டு- ஒரு திடீர்ப் பெருந் தாக்­கு­தலை நடத்த முடியும் என்ற இரா­ணுவ பாடத்தை ஹமாஸ் கற்றுக் கொடுத்­தி­ருக்­கி­றது.

விடு­தலைப் புலி­க­ளுக்குப் பிந்­திய ஒன்­றரை தசாப்­தங்­களில் மிக நவீ­ன­மான தொழில்­நுட்­பங்கள் வந்து விட்­டன.

அவற்றை கையாண்ட இஸ்­ரேலை ஏய்த்து விட்டு இந்த தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றி­ருப்­பது தான் கவ­னிக்­கப்­பட வேண்­டி­யது.

புல­னாய்வுத் தவ­றுதான் இதற்குப் பிர­தான காரணம் என்று கூறி­யி­ருக்­கிறார் இஸ்­ரேலின் மொசாட் உளவுப் பிரிவின் முன்னாள் தலை­வ­ரான டன்னி யாடொம் (Danny Yatom).

“சனிக்­கி­ழமை இஸ்­ரேலின் பாது­காப்பு தந்­தி­ரோ­பா­யங்கள் அடி­யோடு சரிந்து விட்­டன. ஹமாஸ் தாக்­குதல் நடத்­திய போது எல்­லாமே தவ­றாகி விட்­டது. யாருக்­குமே புல­னாய்வுத் தகவல் கிடைத்­தி­ருக்­க­வில்லை.” என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

ஒட்­டு­மொத்­தத்தில் இஸ்­ரே­லி­யர்கள், தங்­களின் மீது தங்­களின் நாட்டின் மீது, தங்­களின் படை­யினர் மீது கொண்­டி­ருந்த நம்­பிக்­கையை இழந்து விட்­டனர்.

பலஸ்­தீ­னர்­களின் நிலங்­களை ஆக்­கி­ர­மித்து, குடி­யேற்­றங்­களின் மூலம், பாது­காப்பு வேலியை அமைத்த இஸ்­ரே­லிய தந்­தி­ரோ­பாயம் இப்­போது தோல்வி கண்­டி­ருக்­கி­றது.

காஸா எல்­லைக்கு அருகே தாக்­கு­த­லுக்கு உள்­ளான நக­ரங்­களில் இருந்­த­வர்கள் கடந்த 50 ஆண்­டு­களில் இவ்­வா­றா­ன­தொரு தாக்­கு­தலை சந்­திக்­க­வு­மில்லை, எதிர்­பார்க்­க­வு­மில்லை என்று கூறி­யி­ருக்­கி­றார்கள்.

அதுதான் யூதர்கள் மத்­தியில் இஸ்ரேல் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருந்த நம்­பிக்கை. முன்னர் ஹமாஸ் ஒரு ரொக்­கட்டை ஏவினால் பல­நூறு குண்­டு­களை ஏவிப் பதி­லடி கொடுக்கும் இஸ்ரேல்.

இஸ்­ரே­லியர் ஒருவர் காயப்­பட்டால் பல பலஸ்­தீ­னர்­களின் உயிர்கள் பறிக்­கப்­படும். இது தான் இது­வரை இருந்­தது. இப்­போது ஹமாஸ் கொத்துக் கொத்­தாக யூதர்­களை வேட்­டை­யாடி பழியைத் தீர்த்­தி­ருக்­கி­றது.

பொது­மக்­களை மாத்­தி­ர­மல்ல, படைத் தள­ப­தி­களைக் கூட கொன்­றி­ருக்­கி­றது. கேர்ணல் ஒருவர் உள்­ளிட்ட பல இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையும் பணயக் கைதி­க­ளாக பிடித்துச் சென்­றி­ருக்­கி­றது. இஸ்­ரேலின் பாது­காப்பு கட்­ட­மைப்பில் இருந்த ஓட்­டை­களை சரி­யாக கவ­னித்து திட்­ட­மிட்­டப்­பட்­டி­ருக்­கி­றது இந்த தாக்­குதல். இது யூத குடி­யேற்­ற­வாத கொள்­கைக்கு கிடைத்த பேரிடி.

யூதக் குடி­யேற்­றங்­களின் மூலம், பலஸ்­தீ­னர்­களின் நில உரி­மை­களை இல்­லாமல் ஆக்­கி­வி­டலாம் என்ற ஆக்­கி­ர­மிப்புக் கொள்­கைக்கு கிடைத்­தி­ருக்­கின்ற பெருந்­தோல்வி.

காஸா எல்­லைக்கு அருகே இனி குடி­யே­று­வ­தற்கு ஒவ்­வொரு யூதரும் பயப்­ப­டு­வார்கள்.

பலஸ்­தீ­னர்கள் மத்­தியில் பல தசாப்­தங்­க­ளாக பொங்கிக் கொண்­டி­ருந்த வெஞ்­சினம் தான் இப்­போது வெளிப்­பட்­டி­ருக்­கி­றது.

அவர்­களின் நிலத்­துக்­கான போராட்டம் ஓய­வில்லை, ஓயாது என்ற செய்­தியை தெளி­வாக கூறி­யி­ருக்­கி­றது.

தங்­களின் நிலங்­களை ஒப்­ப­டைத்து. தங்­க­ளுடன் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொள்­ளாமல், யூதர்­களால் நிம்­ம­தி­யாக தங்­களின் நாட்டில் இருக்க முடி­யாது என்ற உண்­மையை அவர்கள் உறைக்க கூறியிருக்கிறார்கள். இந்த உண்மையும், பாடமும் இலங்கைக்கு முக்கியமானது.

இலங்கை அரசாங்கமும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவியும், பௌத்த மயமாக்கலின் மூலமும், தமிழரின் நிலங்களை  அபகரித்து விடலாம் எனக் கணக்குப் போடுகிறது. இது ஆபத்தானது. இன்றில்லா விட்டாலும் என்றோ ஒருநாள், இதேபோல தமிழர்களும் கொதித்தெழும்  நிலை வரலாம்.

பலஸ்தீன நிலங்களை ஆக்கிரமித்து யூதக் குடியேற்றங்களுக்கு இஸ்ரேல் எவ்வாறு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததோ-  அதேபோலத் தான், இங்கும் அரசாங்கம் சிங்களக் குடியேற்றங்களுக்கு அடித்தளம் போடுகிறது. ஆனால், தமிழர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால் தான் சிங்களவர்களும் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும்.

ஹமாஸின் தாக்குதலை, வெறுமனே பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற கோணங்களில் நோக்குவதை விட்டு-  யதார்த்தபூர்வமாக இதனை பார்க்க வேண்டும்.

இன்றைக்கு இஸ்ரேலியர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த பாடத்தை, இலங்கை தனக்கானதாகவும் எடுத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனமானது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலுக்கு பின்னால் இழுபடுவதை விடுத்து ஆபத்தான...

2026-03-13 09:32:30
news-image

நெருங்கி வருகிறதா பொருளாதார சூறாவளி?

2026-03-12 16:55:09
news-image

மத்திய கிழக்கு போர் சூழல் : ...

2026-03-12 13:18:36
news-image

ஈரானின் வாரிசு அரசியல்  

2026-03-10 17:58:22
news-image

ஒரு பதிவு; ஒரு பகிர்வு; வேகமெடுக்கும்...

2026-03-10 13:09:42
news-image

போர்க்காலம் ஒன்றில் மனிதாபிமானத் தலைமைத்துவம்

2026-03-10 12:51:30
news-image

“இது நான் இல்லை” ; குற்றங்களிலிருந்து...

2026-03-09 16:09:34
news-image

இலங்கையில் டொலர் தட்டுப்பாடு : உணவுப்...

2026-03-09 13:09:44
news-image

மதுசார பாவனையாளர்களால் பாதுகாப்பின்மை, அசௌகரியத்தை உணரும்...

2026-03-09 12:53:33
news-image

பெண்ணியம் போற்றும் பரதக்கலை

2026-03-08 17:29:28
news-image

மூன்றாம் உலக போர் ஏற்படும் சாத்தியக்கூறுகள்...

2026-03-08 13:24:37
news-image

இலங்­கையின் வாசலை தட்டிய போர்

2026-03-08 13:17:49