யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது நேற்று (14) மாலை 5.30 மணியளவில் கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தின் மீது புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் இ.போ.ச பேருந்தின் முன்பகுதி சிறியளவில் சேதமடைந்துள்ளது. அத்தோடு, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
குறித்த பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர், அப்பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM