அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபிளின் கழுத்தை கைவிலங்கினால் நெரிக்க முயற்சித்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அவிசாவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரை சுட்டுக் கொன்று இருவரை காயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான வழக்குப் பொருட்களை கைப்பற்றுவதற்காக அவரை அழைத்துச் சென்றபோது சந்தேக நபருக்கு கைவிலங்கிடப்பட்டிருந்தது.
இதன்போதே பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கழுத்தை தனக்கு இடப்பட்டிருந்த கை விலங்கினால் நெரிக்க முயன்றுள்ளார்.
இதனையடுத்து பலத்த காயமடைந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவிசாவளை தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவிசாவளை, மணிங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மகேஷ் தனஞ்சய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM