கொழும்பு - பதுளை வீதியின் பெல்மதுளை 120 மைல் கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று முச்சக்கரவண்டியை முந்திசெல்ல முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பெல்மதுளை, கொட்டாபிட்டி தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.