(ஆர்.ராம்)
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வான், கடல்வழி போக்குவரத்து இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவுகின்ற நிலையில் அதுதொடர்பில் இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் கரிசனை செலுத்தியுள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கருடனான சந்திப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கையில்,
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் தருணத்தில் இந்தியாவின் முழுமையான ஆதரவுசம்பந்தமாகவும் உதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் சம்பந்தமாகவும் நினைவு கூரப்பட்டது.
அத்துடன், இலங்கையில் இந்திய முதலீடுகளை அதிகரித்துச் செல்வது சம்பந்தமாகவும் அதிகமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனைவிடவும் வான், கடல்வழி போக்குவரத்துக்கள் ஊடாக இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறவுகள் மேலும் வலுவடையும் என்ற விடயத்தில் கரிசனை செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, வடக்கு மாகாணத்திற்கும், நாகைப்பட்டினத்துக்குமான கடல்வழிப்போக்குவரத்தினை மேம்படுத்தி தொடர்ச்சியாக முன்னெடுப்பது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாக பண்டங்கள் பரிமாற்றம் மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு எமக்குள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM