பிரைய்ன் எடிமா எனப்படும் மூளை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

13 Oct, 2023 | 10:34 PM
image

எம்மில் சிலருக்கு மூளை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு அங்கு வீக்கம் ஏற்படக்கூடும். இதனை உடனடியாக துல்லியமாக அவதானித்து அதற்குரிய சிகிச்சையை பெறாவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறு அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய மூளை பகுதி பல்வேறு அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு வளையமாக திகழ்கிறது. மூளையின் உட்பகுதியில் அனைத்து விடயங்களும் சரிசமமாகவும், சம விகிதத்திலும் இருக்க வேண்டும். மூளைக்கு தொடர்ந்து ஒக்சிஜனும், ரத்த ஓட்டமும் சீராக இருக்க வேண்டும். இதற்காக எம்முடைய மூளை பகுதியில் பல்வேறு அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு வளையங்கள் உள்ளது. இந்த பாதுகாப்பு அடுக்குகளில் ஏதேனும் பாதிப்போ.. தடையோ.. இடையூறோ.. கோளாறுகளோ.. ஏற்பட்டால், அதன் காரணமாக மூளை பகுதியில் வீக்கம் ஏற்படும்.

பொதுவாக மூளை பகுதியில் ஏற்படும் வீக்கங்களை மருத்துவர்கள் சைட்டோ டாக்ஸிக் எடிமா , வாஸோஜெனிக் எடிமா, இன்டஸ்டியல் எடிமா என மூன்று வகையினதான பாதிப்புகளாக வகைப்படுத்துவர்.  மூளை வீக்க பாதிப்பை தொடக்க நிலையில் துல்லியமாக அவதானித்து, நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்டிருக்கும் மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை அளிக்கலாம். மேலும் இதற்கு ஆன்ட்டி செரிபிரல் எடிமா மெஸர்ஸ் எனும் சிகிச்சை வழங்கப்பட்டு முழுமையான நிவாரணம் அளிப்பர்.

டொக்டர் வேணி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30
news-image

தழும்புகளில் ஏற்படும் வலிக்கான நிவாரண சிகிச்சை

2025-01-29 20:45:31
news-image

செர்வியோஜெனிக் தலைவலி பாதிப்புக்கான சிகிச்சை 

2025-01-27 19:26:02
news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10
news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32