கொழும்பில் உள்ள அனைத்து உணவகங்கள் மூடப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.

 தற்போது நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு அதிகரித்து நிலவுகிறமை முன்னிட்டு அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.