தெற்காசியாவின் முன்னணி ஒன்லைன் சந்தைப்பகுதியான Daraz குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பில் இரண்டு தினங்கள் நடைபெற்ற இலத்திரனியல் வணிக மாநாடு 2023 இல், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் துறையின் முன்னணி நிபுணர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இலத்திரனியல் வணிகத்தின் வாய்ப்புகள் தொடர்பில் இவர் ஆராய்ந்ததுடன், டிஜிட்டல் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் பெண்கள் ஆற்றும் முக்கிய பங்களிப்பையும் கொண்டாடியிருந்தனர்.
பிராந்தியத்தில் இலத்திரனியல் வணிகம் பின்பற்றப்படுவதை துரிதப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் இடைவெளியை இல்லாமல் செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் உள்ளார்ந்த விளக்கங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்றவற்றை தெற்காசிய இலத்திரனியல் வணிக மாநாடு கொண்டிருந்தது.
நாடுகளுக்கிடையிலான (e-commerce) இலத்திரனியல் வணிகத்துக்கான மூலோபாயங்கள், தொழில்முயற்சியாண்மையை ஊக்குவித்தல், சமூக தாக்கத்துக்கு தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல் மற்றும் கொள்கை கட்டமைப்புகளை வழிநடத்தல் போன்ற முக்கியமான தலைப்புகள் தொடர்பில் இந்த மாநாட்டில் பேசப்பட்டிருந்தது. மேலும், இலத்திரனியல் வணிகத்துறையை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு உள்ளடக்கத்தின் முக்கியத்துவம், நிலைபேறாண்மை மற்றும் பிரத்தியேகமான வாடிக்கையாளர் அனுபவங்கள் போன்றன தொடர்பிலும் நிபுணர்கள் கலந்துரையாடியிருந்தனர்.
மாநாடு தொடர்பில் கூகுள் தென் கிழக்காசியாவின் வினைத்திறன் தீர்வுகள் தலைமை அதிகாரி ஷபனா பதாமி கருத்துத் தெரிவிக்கையில்,
“Daraz இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலத்திரனியல் வணிக மாநாட்டில் பெண்கள் நிகழ்வில் இரண்டாவது ஆண்டாக இம்முறை எனக்கு பேச வாய்ப்புக் கிடைத்ததையிட்டு நான் பெருமை கொள்கின்றேன். இன்றைய காலகட்டத்தில் மனிதகுலம் எதிர்கொண்டுள்ள மிகவும் நுணுக்கமான தொழில்நுட்பமான artificial intelligence பற்றி பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்திருந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. AI உடன் பெண்களுக்கும் இலத்திரனியல் வணிகத்துக்கும் பெருமளவு புதிய மற்றும் விறுவிறுப்பான வாய்ப்புகள் பல கிடைக்கும்.” என்றார்.
இலத்திரனியல் வணிக சூழலில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சிறு வியாபாரங்களுக்கு அவசியமான அறிவையும், சாதனங்களையும் பெற்றுக் கொள்வதற்கு முக்கியமான களமாகவும் இந்த மாநாடு அமைந்திருந்தது. டிஜிட்டல் சந்தைப்பகுதியில் உறுதியான பிரசன்னத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவோருக்கு பெறுமதி வாய்ந்த உள்ளடக்கங்கள் மற்றும் வளங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பெறுமதி வாய்ந்த உள்ளடக்கங்கள் மற்றும் வளங்கள் போன்ற பரிபூரண கலந்துரையாடல்களையும் சிறப்பையும் நிகழ்வு வழங்கியிருந்தது.
ஆரம்பநிலை நிறுவனங்கள் மற்றும் சிறு வியாபாரங்களுக்கு போட்டிகரமான இலத்திரனியல் வணிக சூழலில் நிலைத்திருப்பதற்கு வலுவூட்டும் வகையில் இந்த வாய்ப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்திருந்தது.
BigPay பிரதம நிறைவேற்று அதிகாரி சுபின் ராதாகிருஷ்ணன் கருத்துத் தெரிவிக்கையில்,
“புத்தாக்கமான நிதித்தொழில்நுட்பத்தினூடாக மக்களுக்கு வலுவூட்டுவதனூடாக அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது என்பது BigPay இன் பிரதான நோக்காக அமைந்துள்ளது. தெற்காசிய இலத்திரனியல் வணிக மாநாட்டில் எமது அனுபவங்கள் மற்றும் உள்ளக தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிந்ததையிட்டு, குறிப்பாக airasia கட்டமைப்புடன் நாம் எவ்வாறு கைகோர்த்துள்ளோம் என்பதை பற்றி பகிர்ந்து கொண்டதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். பிராந்தியத்தில் வணிகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நிதித் தொழில்நுட்பங்கள் மற்றும் வாடிக்கையாளர் சூழல்கட்டமைப்புகள் ஆகியவற்றுக்கிடையிலான ஆழமான பங்காண்மைகள் முக்கியத்துவம் வாய்ந்தன என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
Daraz குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜார்கே மிக்கெல்சென் கருத்துத் தெரிவிக்கையில்,
“தெற்காசிய பிராந்தியத்தின் இலத்திரனியல் வணிகத்தின் சிறந்த சிந்தனையாளர்களை ஒன்றுகூட்டியிருந்தமை தொடர்பில் நாம் பெருமை கொள்கின்றோம். இலத்திரனியல் வணிகத்தின் வாய்ப்புகளை மாத்திரம் இந்த மாநாடு வெளிக்கொண்டு வராமல், கைகோர்ப்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றையும் காண்பித்திருந்தது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM