காதலர்கள் தினத்தினை முன்னிட்டு நம் நாட்டு சுகந்திர இசைக்கலைஞர்களில் பாடலாசிரியரான எஸ்.ஜீ.பிரபு சொல்லிசைக்கலைஞனாக அறிமுகமாகும் “என் கண்ணம்மா”  பாடல் நேற்று யூடியுப் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் வளர்ந்துவரும் இளம் இசையமைப்பாளரான யஜீவன் இசையமைத்து பாடியுள்ள “என் கண்ணம்மா” பாடலில் கடந்த காலங்களில் பாடலாசிரியராக பல பாடல்களில் பணியாற்றி வந்த எஸ்.ஜீ.பிரபு சொல்லிசைக்கலைஞனாக அறிமுகமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பாடலின் இசைக்கலவையினை பிரேம் ராஜ் செய்துள்ளதோடு, பாடலின் ஒளிப்பதிவினை பிரவீன் செய்துள்ளார். குறித்த பாடலினை கஜன் கே கலையமுதன்  இயக்கியதோடு பாடலின் தொகுப்பாக்கம் பணியினையும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பாடலின் காணொளியில் டிலானி மற்றும் யஜீவன் நடித்துள்ளனர்.மேலும் இப்பாடல் இந்தியாவின் பிரபலமான DIVO யூடியுப் அலைவரிசையில் வெளிவந்த முதலாவது இலங்கை படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.