மொராக்கோ மராகேஷில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வருடாந்த கூட்டங்களுடன் 'இலங்கை: கடன் நிலைத்தன்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தத்திற்கான பாதைகள்' என்ற தலைப்பில் ஒரு தனிப்பட்ட அமர்வு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு 'பொருளாதார மீட்சிக்கான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தம் தொடர்பான இலங்கை சிவில் சமூக முன்முயற்சியுடன்' தொடர்புடைய நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கையை வழிநடத்துவதில் மேற்கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய முன்னுரிமைகள் குறித்து இந் நிகழ்வு கவனம் செலுத்தவுள்ளது:
(1) சிவில் சமூகம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கையில் நடத்தப்பட்ட சமீபத்திய நிர்வாக மதிப்பீடுகள் மற்றும் 2) இலங்கையின் கடன் வெற்றிகரமான மற்றும் நிலையான மறுசீரமைப்பை அடைந்துகொள்வதில் IMF, அரசாங்கம் மற்றும் நாட்டின் கடன் வழங்குநர்கள் ஆகியோரின் பங்களிப்பு.
"இலங்கையின் ஊழல் எதிர்ப்பு நிலப்பரப்பில் சிவில் சமூக ஆளுகையை கண்டறியும் அறிக்கை" செப்டம்பர் நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. இது இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் இலங்கைக்கான 34 நிர்வாக சீர்திருத்த பரிந்துரைகளின் விரிவான தொகுப்பை உள்ளடக்கியுள்ளது. செப்டெம்பர் மாத பிற்பகுதியில், ஆசியாவிலேயே முதன்முதலாக இலங்கை தொடர்பில் தனது ஆளுகை கண்டறியும் அறிக்கையை IMF வெளியிட்டது.
இந்த இரண்டு நிர்வாக மதிப்பீடுகளும் சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை அமைக்கும் திறனைக் கொண்டுள்ளன. கடன் நிர்வாகத்தில் முன்னேற்றங்கள் எவ்வாறு நாடுகளுக்கு தொடர்ச்சியாக வரும் கடன் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும் என்பதை இந்த நிகழ்வில் கலந்துரையாடப்படும்.
இலங்கையின் வெளிநாட்டு கடன்களை கணிசமாக குறைப்பதனூடாக எவ்வாறு இறுதியில் ஒட்டுமொத்த கடன் சுமையை குறைப்பது என்பது மற்றும், நாட்டின் கடுமையான கடன் நிலைப்புத்தன்மை இலக்குகளை அடைய அது எவ்வாறு உதவும் என்பது பற்றியும் இந்நிகழ்வில் கலந்துரையாடப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர், வெரிட்டே ரிசர்ச்சின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் நிறுவனத்தின் இலங்கையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நதீஷானி பெரேரா மற்றும் குளோபல் ஸொவரின் அட்வைசரி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி ஆய்வாளர் தியோ மாரெட் ஆகியோர் உரையாற்றி கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளனர். தாம்சன் ராய்ட்டர்ஸ் எமர்ஜிங் மார்க்கெட்ஸின் நிருபரான ஜோர்ஜெலினா டோ ரொசாரியோ அவர்களால் இந்த அமர்வு வழிநடத்தப்படும்.
இத் தனிப்பட்ட நிகழ்விற்கு பிரத்தியேகமாக அழைக்கப்பட்டவர்களில் IMF சபையின் பல நிர்வாக பணிப்பாளர்கள், பலதரப்பு நிறுவனங்களின் பிராந்திய தலைவர்கள், பல முக்கிய பங்குதாரர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் மற்றும் மராகேஷில் நடைபெறும் IMF இன் வருடாந்த கூட்டத்திற்கான இலங்கை பிரதிநிதிகள் குழுவின் உயர்மட்ட உறுப்பினர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM