இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் சரணடைந்துள்ளார். சுதாகரன் நீதிமன்றத்தில் சரணடையவில்லையென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க. பொதுச்செயலர் சசிகலா அவரது அண்ணி இளவரசி இருவரும் ஒரே காரில் பரப்பன அக்ரஹாரா சென்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் தர முடியாது என உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்திருந்த நிலையில், சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் காரில் புறப்பட்டார்.

இந்நிலையில் போயஸ் கார்டனில் இருந்து காரில் சசிகலா, இளவரசி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்றனர். அப்போது, பூ தூவி மரியாதை செலுத்திய சசிகலா, ஜெயலலிதா சமாதி மேல் கையை மூன்று முறை அடித்து சபதம் செய்த நிலையில், தற்போது பெங்களூர் பரப்பன அக்ரகார சிறைச்சாலை வளாகத்தில் சரணடைந்துள்ளார். சுதாகரன் நீதிமன்றத்தில் சரணடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.