எம்மில் சிலருக்கு ரூமடாய்ட் ஒர்த்ரைடிஸ் எனப்படும் முடக்குவாத பாதிப்பு ஏற்படும். கை மூட்டு மற்றும் கால் மூட்டுகளில் ஏற்படும் இத்தகைய பாதிப்பு காரணமாக தாங்க இயலாத வலி உண்டாகும் போது அவர்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுகிறார்கள்.
அதன் போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து ரூமட்டாய்ட் ஒர்த்ரைடிஸ் பாதிப்பு தான் என உறுதிப்படுத்தும் போது அதற்கான நிவாரண சிகிச்சையாக வலி நிவாரணி மாத்திரைகளையும், ரூமடாய்ட் ஒர்த்ரைடீஸ் பாதிப்பை குணப்படுத்துவதற்கான மாத்திரைகளையும் வழங்குவர்.
இந்நிலையில் சிலருக்கு இத்தகைய சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது வலிக்கு நிவாரணம் முழுமையாக கிடைக்கப்பெற்ற பின், மீண்டும் வலி ஏற்படுமா? என்பது குறித்து சந்தேகம் இருக்கிறது.
இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் விளக்கமளிக்கையில், '' முடக்குவாத பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் வலி நிவாரணிகளையும், பாதிப்பு குணமடைவதற்கான மருந்தியல் சிகிச்சைகளையும் வழங்குவர்.
நாளடைவில் மீண்டும் கால் மூட்டு பகுதியிலோ அல்லது கை விரல்களின் மூட்டு பகுதியிலோ வலி ஏற்பட்டால் முடக்குவாத பாதிப்பு கட்டுப்பாட்டில் இல்லை என பொருள் கொள்ள வேண்டும்.
இதன்போது மருத்துவர்கள் பிரத்யேகமாக சில பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர். எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற அத்தகைய பரிசோதனையில் முடக்கு வாத பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அதற்குரிய மருந்தியல் சிகிச்சையில் வீரியத்தை அதிகரித்து வழங்கி அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பர்.
வேறு சிலருக்கு இத்தகைய முடக்குவாத பாதிப்பின் காரணமாக அவர்களுடைய மூட்டுகளில் தேய்மான பிரச்சனை ஏற்படக்கூடும். இதனை மருத்துவர்கள் பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்தால், அதற்குரிய சிகிச்சையை வழங்கி இத்தகைய பாதிப்பிற்கு நிவாரணம் வழங்குவர். சிலருக்கு இதன் காரணமாகவும் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்க கூடும்.
வேறு சிலருக்கு இதன் போது ஃபைப்ரோமால்ஜியா எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும். அதற்குரிய சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர்.
வேறு சிலருக்கு சிலருக்கு முடக்குவாத பாதிப்பின் காரணமாக பணி சுமையினை குறைத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பர். குறிப்பாக பெண்மணிகள் தங்களது அலுவலகப் பணி மற்றும் இல்ல பணியைத் தொடர்ந்து பணியாற்றும்போது அவர்களுக்கு இதன் காரணமாகவும் வலி ஏற்படக்கூடும். இதனை துல்லியமாக அவதானித்து அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிப்பதன் மூலம் இத்தகைய வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
எனவே முடக்குவாத பாதிப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெறுபவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் அவதானிப்பில் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தியல் சிகிச்சைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும். மேலும் அவர்கள் பரிந்துரைக்கும் ஓய்வினை உறுதியாக ஏற்றுக் கொண்டால் வலியிலிருந்து முழுமையாக நிவாரணம் பெற இயலும்.
டொக்டர் பாலசுப்பிரமணியன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM