வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக பண மோசடி ; சீனப் பிரஜை கைது

Published By: Digital Desk 3

12 Oct, 2023 | 02:59 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பணம் பெற்றுக்கொண்டு தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் வாடிக்கையாளர் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக்கூறி சுற்றுலா விசாவில் 63 இலங்கையர்களை தாய்லாந்துக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் சீனப் பிரஜை ஒருவர் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை  பணம் பெற்றுக்கொண்டு இலங்கையர்கள் சிலரை சீனப் பிரஜை ஒருவர் சுற்றுலா விசாவில் தாய்லாந்துக்கு அனுப்புவதாகக் கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் வர்த்தகம், ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றவியல் விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த 63 இலங்கையர்களும் மாதமொன்றுக்கு ஆயிரம் அமெரிக்க டொலர் சம்பளம் பெற்றுத் தருவதாகக்கூறி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் தாய்லாந்துக்கு சென்ற அவர்கள் அனைவரும் படகு மூலம் மியன்மார் மற்றும் லாகோஸ் நாட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கிருக்கும் கட்டிடமொன்றுக்குள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த தரப்பினரிடத்தில் பெண்கள் போன்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு  சமூகவலைத்தளங்களின் புதிய கணக்குகளை ஆரம்பித்து இலங்கையில் உள்ள செல்வந்தர்கள் மற்றும் வர்த்தகர்களிடத்தில் தொடர்புகொண்டு அவர்களிடமிருந்து அவர்களுடைய வங்கி கணக்கின் விபரங்களை பெற்றுக் கொடுக்குமாறும்  வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

நாளொன்றுக்கு குறைந்தது 3 பேரின் தகவல்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு வழங்கவில்லை எனில் தகவல் வழங்காத தரப்பினருக்கு கடுமையான தாக்குதல் மேற்கொள்ளபடுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், அவ்வாறு கிடைக்கபெறும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை  அனைத்தையும் நாட்டில் இருக்கும்  சீனப்பிரஜைக்கு அனுப்பி, அவர்  குறித்த வர்த்தகர்களிடம் நெருங்கிப் பழகி தொடர்புகளை பேணி, அவர்களிடமிருந்து சூட்சுமமான முறையில் பணத்தை அபகரித்துள்ளார். 

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்  சட்டவிரேதமாக குறித்த 63 இலங்கையர்களையும் வெளிநாட்டுக்கு அனுப்பிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சீனப்பிரஜையும் உள்ளடங்குவதாகவும்  ஆட்கடத்தல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் அவர்  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும், பிரதான சந்தேகநபர் சீனப்பிரஜைக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சட்டவிரோதமான முறையில் சுற்றுலா விசாவில் வெளிநாட்டுக்கு சென்ற குற்றத்தின் பேரில் குறித்த 63 பேருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பியூமி ஹன்சமாலியை கைது செய்வது தொடர்பில்...

2024-07-15 17:59:30
news-image

பஸ் தரிப்பிடத்தில் மோதி மோட்டார் சைக்கிள்...

2024-07-15 17:40:21
news-image

யாழ்ப்பாணத்து தமிழும் சைவமும் தமிழ்நாட்டில் இல்லையே!...

2024-07-15 17:48:07
news-image

தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா...

2024-07-15 16:54:18
news-image

இரு சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்த போலி...

2024-07-15 16:58:01
news-image

ஆனமடுவ ஜயசூரிய மகா வித்தியாலய மாணவர்களின்...

2024-07-15 16:54:46
news-image

இனப்பிரச்சினைக்கு அனைத்து இனக்குழுவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை...

2024-07-15 16:39:26
news-image

சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி, நாட்டைப்...

2024-07-15 17:07:31
news-image

உள்ளக நீர்வழிகள் மூலம் பொருட்கள் மற்றும்...

2024-07-15 17:01:04
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2024-07-15 16:41:29
news-image

தம்புள்ளையில் லொறி - வேன் மோதி...

2024-07-15 16:32:05
news-image

காணியின் உரிமையும் எழுத்துமூல அனுமதியின்றியும் காணியை...

2024-07-15 17:09:00