ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது - விமல் வீரவன்ச

Published By: Vishnu

12 Oct, 2023 | 01:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை பிற்போடுவது கடினமானதல்ல.

ஆகவே எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியதே.தேர்தலுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை தோற்றம் பெற்றுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க உலகத்தை வலம் வருகிறார்.ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு எட்டப்படவில்லை.பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் தீர்மானங்களை முன்னெடுக்கிறது.

சர்வதேச நாணய நிபந்தனைக்கு அமைய வரி உட்பட அத்தியாவசிய சேவை கட்டணங்கள் உயர்வடைந்துள்ளன.மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளது.

மின்சார சபை எதிர்கொள்ளும் நட்டத்தை முகாமைத்துவம் செய்துக்கொள்வதற்காகவே மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்படுகிறது.மின்சார சபையின் ஊழல் மற்றும் வீண் செலவுகளை கட்டுப்படுத்தினால் முறையற்ற மின்கட்டண அதிகரிப்பை தடுக்கலாம்.

தேர்தல் ஊடாகவே ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியும்.இதனால் தான் காலத்துக்கு காலம் தேர்தல் நடத்தப்படுகிறது.நாட்டு மக்கள் போராட்டத்தின் ஊடாக ஆட்சிமாற்றத்தை ஏற்படு;த்தினார்கள்.அதுவும் தற்போது ஸ்திரமற்றதாக காணப்படுகிறது.மக்களின் தேர்தல் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தல் முறைமையை திருத்தியமைக்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தேர்தலை பிற்போடுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறமையானவர்.பெண் பிரநிதித்துவத்தை அதிகரிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைத் தேர்தல் முறைமையை திருத்தம் செய்தார்.இறுதியில் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வரையறை செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு எல்லை நிர்ணயம் புதிதாக வகுக்கப்பட்டது.தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.இவ்வாறான பின்னணியில் தேர்தல் முறைமையை திருத்தம் செய்யும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்,உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை பிற்போடுவது கடினமானதல்ல.ஆகவே எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியதே.தேர்தலுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை தோற்றம் பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எமக்கு எதிராக பொதுஜன பெரமுனவினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36