இலங்கையின் முன்னணி முதற்தர இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 4 ஆவது ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகள் 2022 இல் இலங்கை பராலிம்பிக் அணிக்கு டயலொக் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. ஒக்டோபர் 20 முதல் 28 வரை சீனாவின் ஹெங்சுவோ (Hangzhou) இல் நகரில் நடைபெறும் மேற்படி ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஈட்டி எறிதல் வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் தலைமையிலான 26 பேர் கொண்ட தடகள அணி ஒக்டோபர் 16 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளது.
இப்போட்டிகளில் 43+ ஆசிய நாடுகளிலிருந்து 4,000+ தடகள வீரர்கள் 20+ வகை விளையாட்டுகளில் பதக்கங்களை வெல்வதற்கு போட்டியிடவுள்ள அதேவேளை, இலங்கை அணியானது வில்வித்தை, தடகளம், பெட்மின்டன், பளு தூக்குதல், படகோட்டம், நீச்சல், மேசைப்பந்து மற்றும் சக்கர நாற்காலி டென்னிஸ் உட்பட 08 வகை போட்டிகளில் பங்குபற்றவுள்ளது.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு, இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 06 தங்கப் பதக்கங்கள் உட்பட 15 பதக்கங்களை இலங்கை பரா தடகள வீரர்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், இம்முறை போட்டிகளில் முன்னைய பதக்க சாதனையை முறியடிக்கும் வகையில் 20 க்கும் அதிகமான பதக்கங்களை ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை அணியினர் போட்டியிடவுள்ளனர்.
26 பேர் கொண்ட இலங்கை அணியின் சார்பாக தினேஷ் பிரியந்த ஹேரத் F46 ஈட்டி எறிதலிலும், சமித்த துலான் F44 ஈட்டி எறிதலிலும் பங்கேற்கவுள்ளனர். மேலும், பாலித பண்டார F42 குண்டெறிதலிலும், மதுரங்க சுபசிங்க T47 400 மீற்றர் போட்டியிலும் பங்கேற்கவுள்னர். அத்துடன், குமுது பிரியங்க T45/46 நீளம் தாண்டுதல் போட்டியிலும், ரஞ்சன் தர்மசேன சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியிலும் , சம்பத் பண்டார மற்றும் மகேஷ் ஜெயக்கொடி ஆகியோர் முறையே வில்வித்தை மற்றும் படகோட்டம் ஆகிய போட்டிகளிலும் போட்டியிடவுள்ள அதேவேளை, வளர்ந்து வரும் புதிய நீச்சல் நட்சத்திரமான கலின பஸ்நாயக்கவும் தங்கப் பதக்கத்தை வெல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் லெப்டினன்ட் தீபால் ஹேரத் இது குறித்து கூறும்போது, “சீனா, கொரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற கடந்த மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை பராலிம்பிக் வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை வென்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக பயிற்சிக்கு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பதக்கம் அணியும் மேடையில் ஏறுவதற்கு தேவையானதைச் செய்ய குழு கடினமாக உழைத்துள்ளது, எனவே ஹெங்சுவோவில் (Hangzhou) அதிக பதக்கங்களை வெற்றி கொள்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,“ இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவினையும், ஊக்கமளிப்பினையும் வழங்கி வீரர்கள் நாட்டிற்கு பெருமையை கொண்டுவருவதற்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் எங்களின் அயராத முயற்சிகளுக்கு ஆதரவளித்து, நீண்டகால விளையாட்டுப் பங்காளியாக இருந்து வரும் நமது பிரதான அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்” என குறிப்பிட்டார்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தேசிய கரப்பந்து, வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி, இலங்கை பகிரங்க கொல்ஃப் மற்றும் பராலிம்பிக் உட்பட இராணுவ பரா விளையாட்டுகள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பரா விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM