வெற்றி அணியொன்றை உருவாக்குங்கள் : புதிய கிரிக்கெட் நிர்வாகத்திடம் விளையாட்டுத்துறை அமைச்சர்

Published By: Priyatharshan

05 Jan, 2016 | 10:17 AM
image

வெற்­றி­பெ­றக்­கூ­டிய அணி­யொன்றை உரு­வாக்கித் தாருங்கள். போட்­டியை ரசிக்­க­க்கூ­டிய வகையில் விளை­யாடும் அணி­யாக அது இருக்­க­வேண்டும். 10 ஓவர்­களில் போட்­டியை முடித்­து­விடும் அணி வேண்டாம் என்று இலங் கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் நிர்­வாக சபைத் தலைவர் திலங்க சும­தி­பா­ல­விடம் கோரிக்கை விடுத்தார் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர.

புதிய நிர்­வாகக் குழு பொறுப்­பு­களை பொறுப்­பேற்கும் நிகழ்வு நேற்று நடை­பெற்­றது. இந்­நி­கழ்­ வில் கலந்­து­கொண்­ட­போதே விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் அங்குபேசு­கையில்,

கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக இடைக்­கால நிர் ­வாக சபைதான் செயற்­பட்­டு­வந்­தது. அந்த காலத்­தில்தான் முறை­கே­டுகள் நடை­பெற்­ற­தாக சொல்­லப்­ப­டு­கி­றது.

அத்­தோடு ஜனா­தி­ப­தியும் சரி பிர­த­மரும் சரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்தனர். அதன்­படி தேர்தல் சுயா­தீ­ன­மாக நடை­பெற்று முடிந்­தி­ருக்­கி­றது. புதி­தாக பொறுப்­பேற்­றுள்ள அனை­வ­ருக்கும் எனது வாழ்த்­துக்­களை தெரி­வித்­துக்­கொள்­கிறேன் என்றார்.

தற்­போது கிரிக்கெட் போட்­டியை யார்தான் பார்க்­கி­றார்கள். பத்து ஓவர்­க­ளுக்குள் போட்டி முடிந்­து­வி­டு­கி­றது. இந்த மாதி­ரி­யான அணியை தெரி­வு­செய்­யாமல் வெற்றி அணியொன்றை தெரிவுசெய்து கொடுங்கள் என்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவர் திலங்க சுமதிபாலவிடம் கோரிக்கை விடுத்தார் அமைச்சர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10
news-image

நியூட்டனின் சகலதுறை ஆட்டத்தால் 2ஆம் அடுக்கு...

2025-03-14 14:08:12
news-image

அவிஷ்க, கவின், அசலன்க ஆகியோரின் அபார...

2025-03-13 19:45:02
news-image

கண்டி அணிக்கு எதிரான போட்டியில் பலமான...

2025-03-13 19:00:12