மூளையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய உதவும் புதிய சிகிச்சை முறை

12 Oct, 2023 | 11:12 AM
image

ப்ரைய்ன் மேப்பிங் என்பது மூளையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைத் துல்லியமாக அளவிடுவதற்காக பயன்படுத்தப்படும் நவீன சிகிச்சை முறை.

தற்போது இந்த முறையில் ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற வகையினதான பெர்ஸனலைஸ்ட் ட்ரான்ஸ்க்ரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேசன் ( PRTMS) தெரபி எனும் புதிய சிகிச்சை முறை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என சென்னையில் இயங்கி வரும் கர்மா பீக் ப்ரைய்ன் எனும் மருத்துவ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக மருத்துவர் லட்சுமி விளக்கமளிக்கையில்,“ எங்களுடைய கர்மா பீக் ப்ரைய்ன் எனும் மருத்துவ சேவையமைப்பானது தற்போது புதிதாக பெர்சனலைஸ்ட் ட்ரான்ஸ்க்ரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன் தெரபி எனப்படும் புதிய சிகிச்சை முறையை மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் இணைந்து கண்டறிந்து, இந்த சிகிச்சையை நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது.

இதற்கு முன் மூளை வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட அல்லது மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிவதற்கு குவான்டிடேட்டிவ் எலக்ட்ரோ என்செலபோகிராம் (QEEG) எனும் கருவியை கண்டறிந்து, அதன் மூலமாக எம்மாதிரியான சிகிச்சையை வழங்குவது என தீர்மானித்து அவர்களை மேம்படுத்தியது. 

பெர்ஸனலைஸ்ட் ட்ரான்ஸ்க்ரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேசன் (PRTMS) தெரபி எனும் புதிய தனித்துவமான சிகிச்சை முறை தற்போது வழங்கப்படும் சிகிச்சை முறைகளில் மேம்பட்டது.

இதன் மூலம் நோய்க்கான அறிகுறிகளையும், நோய்க்கானக் காரணங்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கவனம் சார்ந்த பிரச்சனைகள், மன அழுத்தம், மனப்பதட்டம், மன இறுக்கம், நடத்தை பிரச்சனைகள், உறக்கமின்மை, ஓட்டிசம், ஒற்றைத் தலைவலி... உள்ளிட்ட ஏராளமான மூளை தொடர்பான நரம்பியல் பாதிப்புகளை துல்லியமாக அவதானித்து, அதற்கான சிகிச்சைகளைத் தெரிவு செய்து, அதனை எளிய முறையில் வழங்கி நோயாளிகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும். 

இந்த சிகிச்சை முறைப்படி நோயாளிகளின் மூளை பகுதியை  ப்ரைய்ன் மேப்பிங் எனப்படும் முறையை QEEG எனும் கருவியை பயன்படுத்தி மூளையின் மின்னாற்றல், அதன் இயங்குதிறன் மற்றும் செயல்பாட்டை துல்லியமாக அளவிட இயலும்.மேலும் ப்ரைய்ன் மேப்பிங் செய்து உங்களுடைய மூளையின் செயல்பாடு, இயங்குத்திறன், மின்னாற்றல் உள்ளிட்ட விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்களுடைய வாழ்க்கை தரத்தையும் நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ள இயலும்.” என்றார். 

தொகுப்பு அனுஷா,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right