வடக்கு மாகாணத்திற்கு  விஐயம் செய்திருக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனைச் சந்தித்து மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். 

காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த மேற்படித் தூதுக் குழுவினர் ஏ9 வீதி கைதடியிலுள்ள மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனைத் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடினர். 

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பார்வையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.