இருபதாம் நூற்றாண்டின் மிகச் சக்தி வாய்ந்த மீடியா சினிமாதான் என்பதில் அபிப்பிராய பேதம் கிடையாது. ஏனைய ஊடகங்களை விட, இப்பொழுதுதான் நூறு வயதை எட்டிப் பிடித்திருக்கும் இந்த விஞ்ஞானம் சார்ந்த ஊடகத்தின் உடனடித் தாக்கம் மிக அதிகமானது. ஒரு சராசரிக் குடிமகனது அன்றாட வாழ்வின் அதிக அளவு இரண்டறக் கலந்து போய்விட்டது இதுதான். ஊலக உருண்டையின் பல்வேறு பாகங்களில் வாழும் பலதரப்பட்ட படைப்பாளிகள் இதை உற்சாகத்தோடு இன்றளவில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையின் சிங்கள சினிமா கூட, அக்காலத்தில் சிறிதளவாகச் சர்வதேச தரத்தில் வைத்துப் பேசக் கூடிய நிலையை நெருங்கிக் கொண்டிருந்தது.
ஆனால் அப்போது , ஈழத்தின் தமிழ் சினிமா…?
முpகமிகப் பின்தங்கிப் போய், அரிச் சுவடிக் கட்டத்திலேயே இருந்தது . இந்திய சினிமாவின் குறிப்பாகத் தென்இந்திய சினிமாவின் ஆதிக்கமும், அந்த சினிமாவே தங்கள் சினிமா என்று ஈழமக்கள் கொண்டாடியதுமே இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
சுpங்கள சினிமாவின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களே தமிழர்கள்தான். சுpங்கள சினிமாத் தயாரிப்பிலும், தென்னிந்திய சினிமா விநியோகத்திலும் தங்கள் நேரத்தை முடக்கி இலாபம் சம்பாதித்த இலங்கைத் தமிழ் முதலாளிகள், தங்களுக் கென்று ஒரு ஈழத் தமிழ் சினிமாவை அதன் அடையாள முகவரிகளோடு வளர்க்கத் தவறிவிட்டார்கள் என்பதுதான் வருத்தமான உண்மை.
இலங்கைத் தமிழ் சினிமா தனது தற்போதைய சூழ்நிலையின் ஊடாக உலக தரம் வாய்ந்த பல அசாத்தியமான படங்களைத் தந்துள்ளது என்றே கூறலாம். இது வெறும் உணர்ச்சி வசப்பட்ட நம்பிக்கையல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மனசு வைத்தால், ஈழத்து இளைய தலைமுறையின் செல்வாக்கு அங்குள்ள சினிமாவிலும் பிரதிபலிக்கும்.
சுர்வதேச கலை,இலக்கிய அரங்கில், தமிழ் மொழியின் முகத்தை ஈழத்து எழுத்துக்களே அடையாளம் காட்டப் போகின்றன என்ற உறுதியான விமர்சனம் வைக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், அந்த நம்பிக்கை திரைப்படங்களுக்கும் பொருந்த வேண்டும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சுpனிமா என்பது ஓர் உன்னதக் கலைச் சாதனமாகும். ஏல்லாக் கலைகளையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரபலமான கலையாகும். வேடிக்கையாக ஆரம்பித்த சினிமாக்கலை வேகமாக உலகமெல்லாம் பரவி அனைத்து மக்களையும் ஈர்த்து நிற்கின்றது.
இந்தச் சினிமா, கலை ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் எமது இலங்கை நாட்டில் சளைத்துவிடவில்லை. சுர்வதேசப் பரிசில்களைப் பெறுமளவுக்குப் பல சிங்களப் படங்கள் இங்கிருந்து உருவாகியிருக்கின்றன. ஆந்தச் சிங்களப் படத்தொழிலை நம்பியே பல கலைஞர்கள் நிலைக்கத் தொடங்கி விட்டார்கள். அது பெரிய தொழிலாகவே மாறிவிட்டது.
இந்த உயர்ந்த நிலை இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டும் ஏன் அன்றளவில் ஏற்படவில்லை? இலங்கையின் தமிழ்த் திரை உலகம் இறந்து கிடந்தது போன்று காணப்படுவதற்குக் காரணம் என்ன? இவை போன்ற கேள்விகள் உள்ளன.தமிழ்த் திரைப்படங்கள் இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும், தென்னிந்தியாவிலேயே அதிகமான தமிழ்ப் படங்கள் உருவாகியிருக்கின்றன. நெடுங்காலமாகவே இந்தியத் தமிழ்ப் படங்களை இலங்கை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். ஆரம்ப காலச் சிங்களப் படங்கள்கூடத் தென்னிந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுவந்தன. 1956ஆம் ஆண்டின் பின்புதான் இலங்கையிலும் சிங்களப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். இப்பொழுது ஆண்டுகள் பல மேற்பட்ட சிங்களப் படங்கள் திரைக்கு வருகின்றன. ஆந்தளவுக்கு முன்னேறிவிட்டன.
1950ஆம் ஆண்டிலேயே இலங்கையில் தமிழ்ப்படத் தயாரிப்பு முயற்சிகள் ஆரம்பமாகின எனலாம். இதுவரை அநேக தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்பட்டது என்று கூறலாம். ஆனாலும், 1950 இல் 50 படங்கள் வெளியாகிய நிலையில் அவற்றில் 36 படங்கள் மட்டுமே திரைக்கு வந்திருக்கின்றன என அப்போது கூறப்பட்டது.
இவ்வாறு வளர்ச்சிக் கண்ட ஈழத்து சினிமா இன்றைளவில் பல்வேறு பாங்கில் வெற்றி கண்டுள்ளது எனலாம்.1947 ஆம் ஆண்டு முதல் இலங்கை நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். 1947 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் எஸ். ஏம். நூயகம் என்பவரால் ‘கடவுனு பொறந்துவ ‘என்ற முதலாவது சிங்கள மொழி பேசும் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
இலங்கைத் திரைப்படத்துறைக்கு அடித்தளம் இட்டவர் எஸ். ஏம். நூயகம் என்ற தமிழரே ஆவார்.மேலும் இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை வரலாற்றில் இலங்கையில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் 1951 இல் வெளியான ‘குசுமலதா’ என்ற திரைப்படம் கருதப்படுகின்றது.
ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியலில், குறிப்பாக திரைப்படத்துறையில், தன்னார்வமாக இணைந்து கொண்ட அமரர் கேசவராஜன், 1986ஆம் ஆண்டு தயாரித்து வெளியிட்ட ‘தாயகமே தாகம்’ என்ற முழுநீள திரைக்காவியத்தின் மூலம், தயாரிப்பாளராக அறிமுகமானார். ஆதனைத் தொடர்ந்து, இவரால் நெறிப்படுத்தி, தயாரிக்கப்பட்ட பிஞ்சுமனம், திசைகள், கடலோரக்காற்று போன்ற திரைக்காவியங்கள் பெருவெற்றியைப் பெற்றிருந்தன.
2009இன் பின்னர் இவரால் தயாரிக்கப்பட்ட ‘பனைமரக்காடு’ என்ற திரைப்படம் மூலம், போருக்கு பிந்திய தமிழர் தாயகத்தின் காட்சிகளை மீண்டும் திரைமொழியில் காவியமாக தொகுத்திருந்தார்.
இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக 2019ஆம் ஆண்டு நோர்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் வருகை தந்திருந்தார். இவ்வாறு பல திரைக்காவியங்களை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.
இவ்வாறாக அமைந்த ஈழத்து சினிமா இன்றளவில் பல்வேறு தொழிநுட்ப வளர்ச்சியுடன் இணைந்து முழு நீள திரைப்படங்களாகவும் குநற்திரைப்படங்களாவும் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்து வலம் வருகின்றன.மேலும் இன்றைய இளம் தலைமுறையினர் சினிமா துறையில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பதுடன் ஊடகத்துறை சார் கற்கைகளை அதிகமாக விரும்பிக் கற்கின்றனர் எனலாம்
B.Sameetha
(University of jaffna, Media studies)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM