(ஆர்.யசி )

உத்தியோக பூர்வமாக விடுமுறை பெற்றுக்கொள்ளாத, விடுமுறை பெற்றுக்கொண்டு சென்று உரிய திகதியில் திரும்பாத மற்றும் அறிவிக்காமல் கடமையிலிருந்து விலகிக் கொண்ட முப்படையினர் 1300 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருமுறை பொது மன்னிப்புக்காலம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த காலத்தில் சரணடையாத முப்படையினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படையினருக்கு வழங்கப்பட்ட சட்டரீதியான சேவை விலக்கு பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் உத்தியோக பூர்வமாக விடுமுறை பெற்றுக்கொள்ளாத, விடுமுறை பெற்றுக்கொண்டு சென்று உரிய திகதியில் திரும்பாத மற்றும் அறிவிக்காமல் கடமையிலிருந்து விலகிக் கொண்ட முப்படையினர் 1300 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டில் முப்படை அதிகாரிகளுக்கான பொது மன்னிப்புக் காலம் இருமுறை வழங்கப்பட்டிருந்தது. கடந்த  டிசம்பர்.01ம் திகதி தொடக்கம்  டிசம்பர் மாதம்  31ஆம்  திகதி வரையில் இரண்டாம் பொது மன்னிப்புக் காலமும்  முதலாவது பொதுமன்னிப்பு கால அவகாசம் கடந்த வருடம் ஜூன் 13ம் திகதி தொடக்கம் ஜூலை 12ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.