தமது நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக கடந்த 13 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் நேற்றுமுதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத்தில் மூவர் வீதம் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுமுதல் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்க்கு முன்னால் பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 3 ஆம் திகதி தொடக்கம்  தொடர்  கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இந்த  நிலையில்  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தமது சொந்த நிலங்களையும் வீடுகளையட்டும் இராணுவம் விடுவிக்கவேண்டும் என்றும் காணிகள் விடுவித்த பின்னரே போராட்டத்தை கைவிடுவோமென்றும்  தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேற்றையதினம் யாழ் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்  ஸ்ரீதரன் மற்றும் இன்றையதினம் சரவணபவான்  ஆகியோர் சந்தித்து தமது ஆதரவினை  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.