எமது மக்கள் ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் : கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியமை தவறு - நாமல்

Published By: Vishnu

11 Oct, 2023 | 06:38 PM
image

எமது மக்கள் ஜனநாயகத்தை விரும்பும் மக்கள், கோட்டாபய ராஜபக்ஷ 52 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி. வேறு எந்த ஜனாதிபதியும் அவ்வாறு வெற்றிபெறவில்லை. கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமை தவறு என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தியாவின் தந்தி டி.வி.க்கு வழங்கிய நேர்காணலிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் அல்லது அந்த நிலையப்பாட்டை சரியென நினைக்கிறீர்களா? என்று தந்தி டி.வி.யின் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நாமல்,

அது தவறானது, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எமது மக்கள் ஜனநாயகத்தை விரும்பும் மக்கள், கோட்டாபய ராஜபக்ஷ 52 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி. வேறு எந்த ஜனாதிபதியும் அவ்வாறு வெற்றிபெறவில்லை. 

நாங்கள் நாட்டை பொறுபேற்ற போது நாடு மிகவும் நெருக்கடியான சூழலிலேயே இருந்தது. துரதிஷ்டவசமான பொருளாதார நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று, வேலையில்லாப் பிரச்சினை, வட்டி வீதங்கள் அதிகரிப்பு, டொலர் கையிருப்பில்லாத காலப்பகுதியிலேயே நாம் நாட்டை பொறுப்பேற்றோம் என்று பதிலளித்தார்.

ராஜபக்ஷர்களின் ஆட்சியை கவிழ்க்க சர்வதேச ஆதரவுடன் சதி நடைபெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாமல் போனதைப்போல்தான் எம்மாலும் தமிழர்களின் மனங்களில் நம்பிக்கையை பெறமுடியாமல் போனது. எப்போது பா.ஜ.க. தமிழகத்தில் வெற்றி பெறுமோ அப்போது நான் நமது கட்சியை வடகிழக்கில் வெற்றிபெற செய்வேன் என்று சொல்லியுள்ளேன். என்றும் கூறியுள்ளார்.

மேலும், என்னுடைய தந்தை சொல்வார் இந்தியாவும் இலங்கையும் உறவினர் என்று. உறவினர் என்பதால் ஏற்றம் இறக்கம் இருக்கத்தானே செய்யும். மோடியின் தமிழ் பேசும் விதமும் அப்பாவின் தமிழ் பேசும் விதமும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

இதேவேளை எனக்கு டென்டுல்க்கரை எப்பவும் பிடிக்கும் யுவராஜையும் பிடிக்கும் இப்போது ரோகித் சர்மா, கோலி, பும்ரா, அதேபோல் சினிமாவில் விஜய்யை மிகவும் பிடிக்கும் ஆனால் என்னுடைய அப்பாவுக்கு ரஜினியை பிடிக்கும் என்றும் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-06-15 06:26:02
news-image

பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடுகிறது !

2024-06-14 18:08:19
news-image

நீர்கொழும்பு கடலில் மூழ்கி இரு மாணவர்கள்...

2024-06-14 22:16:30
news-image

தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார் ;...

2024-06-14 22:31:10
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்...

2024-06-14 20:17:48
news-image

நுவரெலியாவில் போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு ...

2024-06-14 20:10:57
news-image

தேர்தல் விவகாரங்களில் தலையிடவில்லை - சர்வதேச...

2024-06-14 17:33:56
news-image

இராணுவம் மீதான யுத்தக் குற்றச்சாட்சியங்களை சேகரிக்கும்...

2024-06-14 19:43:25
news-image

இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையர்களை...

2024-06-14 19:30:54
news-image

வடக்கின் 3 மாவட்டங்களில் 6 இடங்களில்...

2024-06-14 19:26:50
news-image

நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் குறைவடைந்துள்ளன ;...

2024-06-14 19:18:57
news-image

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும்...

2024-06-14 18:28:24