‘உலக நாயகன்’ கமல்ஹாசன் வெளியிட்ட ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ பட டைட்டில் லுக்

11 Oct, 2023 | 09:31 PM
image

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கிங்ஸ்டன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை  'உலக நாயகன்' கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'. இப்படத்தில் 'இசை அசுரன்' ஜீ.வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் திவ்யபாரதி, 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி,  சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் ஷாபுமோன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கடல் பின்னணியில் திகில் சாகச படைப்பாக  தயாராகும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜீ.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார். 

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகும் 'கிங்ஸ்டன்' எனும் இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகிறது என்றும், இந்திய சினிமாவில் முதன்முதலாக கடல் பின்னணியில் திகில் சாகச படமாக இந்த திரைப்படம் உருவாகிறது என்றும், இதன் படப்பிடிப்பு  தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனுஷ் இயக்கும் ' நிலவுக்கு என்...

2024-12-12 15:38:08
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'அறிவான்'...

2024-12-12 15:38:42
news-image

ரட்சிதா மகாலட்சுமி நடிக்கும் 'எக்ஸ்ட்ரீம்' படத்தின்...

2024-12-11 17:37:18
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட நடிகர்...

2024-12-11 17:04:42
news-image

நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம்: முதல்வர்...

2024-12-11 17:04:15
news-image

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின்...

2024-12-10 18:41:08
news-image

பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் சீயான் விக்ரமின்...

2024-12-10 15:06:20
news-image

ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன்

2024-12-10 14:14:17
news-image

வசூலில் அதிரடி காட்டும் அல்லு அர்ஜுனின்...

2024-12-10 14:09:49
news-image

இறுதி கட்டத்தில் கௌதமன் நடிக்கும் '...

2024-12-10 14:10:21
news-image

விஜய் தேவரகொண்டா வெளியிட்ட நடிகை ராஷ்மிகா...

2024-12-10 14:10:48
news-image

இயக்குநர் பேரரசு தொடங்கி வைத்த 'சதுரங்க...

2024-12-10 12:14:23