(எம்.மனோசித்ரா)
சமூக வலைத்தளங்களின் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு போதுமானளவு சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையிலுள்ளன.
எனவே ஜனாதிபதியால் தன்னிச்சையாக நியமிக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவை தோற்றுவிக்கும் சர்வாதிகார நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் சமூக வலைத்தளங்களை மாத்திரமின்றி, தற்போது இணையத்தில் இயங்கும் அச்சு ஊடகங்கள் உட்பட பிரதான ஊடகங்களையும் முடக்குவதாகவே அமையும்.
இதன் ஊடாக நியமிக்கப்படவுள்ள ஆணைக்குழு சுயாதீனமானதாக இருக்காது. காரணம் அதன் உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்படுகின்றனர்.
இந்த சட்டமூலத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதற்கு நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. எனவே அரசாங்கம் இதனை மீளப்பெற வேண்டும்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். அதன் அடிப்படையில் ஜனநாயகத்துக்கு முரணாக கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை இந்த சட்ட மூலத்தின் ஊடாக பறிப்பதற்கு இடமளிக்க முடியாது.
அது மாத்திரமின்றி ஜனாதிபதிக்கு எதிராக குரலெழுப்பினால் அவற்றை முடக்குவதற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
சமூக வலைத்தளங்கின் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு போதுமானளவு சட்டம் ஏற்கனவே நாட்டில் நடைமுறையிலுள்ளது. எனவே இவ்வாறான கடுமையான சட்ட மூலம் தேவையானதல்ல. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு, அனைவரையும் முடக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM