அஜித் குமார் நடிப்பில் தயாராகி வரும் 'விடாமுயற்சி' எனும் திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியலில் லேட்டஸ்ட்டாக நடிகை ரெஜினா கசான்றா இணைந்திருப்பதாக பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநரும், நடிகருமான மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'விடாமுயற்சி'. இதில் அஜித் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இவருடன் திரிஷா, ஆரவ், பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ரெஜினா கசான்ட்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என்றும், முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் படக்குழுவினர் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM