(எம்.மனோசித்ரா)
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகவும் பரபரப்பான கப்பல் பயணப்பாதை இருப்பதால், எண்ணெய் கசிவுகள் காரணமாக கடல்சார் அனர்த்தங்களினால் இலங்கை பாதிக்கப்படும் அபாயம் அதிகம் எனவும், இதன் காரணமாக கடற்படையினருக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது அவசியமாகும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (10) லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய நிறுவனத்தில் நடைபெற்ற பேரிடர் இடர் முகாமைத்துவம் மற்றும் இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தில் ஜப்பான் பங்கு பற்றிய மாநாட்டில் ஆரம்ப உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.
இந்து சமுத்திர ரிம் சங்கத்தில் பேரிடர் மேலாண்மைக்கு ஜப்பான் பல்வேறு வழிகளில் பங்களிக்கிறது. அறிவுப் பகிர்வு, தர மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றத் திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பிராந்திய நிறுவனங்களுடனான செயலில் ஈடுபாடு ஆகியவற்றின் மூலம், இந்து சமுத்திர உறுப்பு நாடுகளில் பேரழிவைத் தாங்கும் திறனை அதிகரிப்பதில் ஜப்பான் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.
லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகள் நிறுவகம் இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்துடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. ஜப்பானிய பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் கொமுரா மசாஹிரோ ஜப்பான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இந்து சமுத்திர ரிம் சங்கத்தின் உறுப்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் பேரிடர் மேலாண்மையை செயல்படுத்துவதற்கான ஒரு தளம் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM