(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த வாரம் நிலவிய மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காலி, மாத்தறை மாவட்ட மக்களுக்கு 15 000 லீற்றர் குடிநீர் செஞ்சிலுவை சங்கத்தினால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளில் நீர் வழங்கல் சபையின் குடிநீர் விநியோகக் கட்டமைப்புக்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியுற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மக்களின் குடிநீர் தேவைக்கு உடனடி நிவாரணமாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் இந்த தண்ணீர் போத்தல்களை வழங்கியதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர் ஜகத் அபயசிங்க தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் வீடுகள், உடைமைகள் சேதம், விவசாயம், மாணவர்களின் கல்வி, உள்ளிட்டவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வை மீட்டெடுப்பதற்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடம் இராஜாங்க அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM