( எம்.மின்ஹாஜ்)

இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் வைத்து அழைப்பு விடுத்தார்.

அத்துடன் மனித கடத்தல் காரர்களுக்கு அஞ்சி அவுஸ்திரேலியாவில் குடியேறி சட்டவிரோத முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்களை மன்னித்து விட்டோம்.ஆகவே முகாம்களில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் நாடுதிரும்ப வேண்டும் 

மேலும் காணாமல் போனோர் குறித்து இனங்காண்பதற்கு காணாமல் போனவர்களுக்கான அலுவலம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டிரன்புல்லை சந்தித்து பேசிய பின்னர் நடந்த இரு நாட்டு தலைவர்களின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.