இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி தான் டுவிட்டரில் பதிவு செய்த காதலர் தின வாழ்த்துச் செய்தினை நொடியில் நீக்கியுள்ளார்.

இன்று சற்றுமுன்னர் அனுஷ்கா சர்மாவுடன் இணைந்திருந்த புகைப்படம் ஒன்றினை டுவிட்டரில் பதிவு செய்து “ நீ நினைத்தால் ஒவ்வொரு நாளும் காதலர் தினம்தான், ஒவ்வாரு நாளையும் எனக்கான  நாளாக நீ மாற்றுகின்றாய்” என பதிவு செய்திருந்தார்.

எனினும் ஒரு சில நொடிகளில் குறித்த பதிவினை தனது டுவிட்டர் தளத்திலிருந்து அவர் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.