சென்னையிலிருந்து படகு மூலம் சட்ட விரோதமாக யாழ். வந்த தாய், மகன், மகள் கைது 

11 Oct, 2023 | 11:05 AM
image

தமிழக கடற்தொழிலாளர்களின் படகு மூலம் சட்ட விரோதமாக இலங்கைக்கு திரும்பிய மூவர் நேற்று செவ்வாய்க்கிழமை (10) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியான 1990ஆம் ஆண்டில் குடத்தனை வடக்கைச் சேர்ந்த தாயாரும் அவரது மகன் மற்றும் மகளும் தமிழகத்துக்குச் சென்று, சென்னையில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர். 

எனினும், அவர்களால் சென்னையில் தொடர்ந்து வாழ முடியாத நிலையில், மூவரும் தமிழக கடற்தொழிலாளர்களின் உதவியுடன் படகு மூலம் யாழ்ப்பாணம், வடமராட்சி குடத்தனை பகுதியில் வந்திறங்கி, உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். 

இந்நிலையிலேயே அந்த தாய், மகன், மகள் ஆகிய மூன்று பேரும் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56
news-image

சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில்...

2025-02-15 15:38:56