(நெவில் அன்தனி)
பாகிஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத், ரஜிவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் உலகக் கிண்ண கன்னிச் சதங்களைக் குவித்து இலங்கையை பலமான நிலையில் இட்டுள்ளனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 344 ஓட்டங்களைக் குவித்தது.
அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 65 பந்துகளில் சதத்தைப் பூர்த்திசெய்தார்.
உலகக் கிண்ணத்தில் அவர் குவித்த சதம், இலங்கைக்கான அதிவேக உலகக் கிண்ண சதமாகப் பதிவானது
இங்கிலாந்துக்கு எதிராக 2015 உலகக் கிண்ணப் போட்டியில் குமார் சங்கக்கார 70 பந்துகளில் குவித்த சதமே இலங்கைக்கான முன்னைய அதிவேக உலகக் கிண்ண சதமாக இருந்தது.
குசல் மெண்டிஸைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரம சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது கன்னிச் சதத்தைப் பெற்றார்.
ஆரம்ப வீரர் குசல் மெண்டிஸ் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தது இலங்கைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. (5 - 1 விக்.)
எனினும் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 102 ஓட்டங்களைப் பகிர்ந்து எதிரணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர்.
பெத்தும் நிஸ்ஸன்க 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 69 பந்துகளில் 111 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர்.
குசல் மெண்டிஸ் 77 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 122 ஓட்டங்களைப் பெற்றார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் குவித்த 3ஆவது சதமாகும்.
சதீர சமரவிக்ரம 89 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 108 ஓட்டங்களைக் குவித்தார்.
இதனிடையே தனஞ்சய டி சில்வாவுடன் 5ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களை சமரவிக்ரம பகிர்ந்தார்.
தனஞ்சய டி சில்வா (25), தசுன் ஷானக்க (12), துனித் வெல்லாலகே (10) ஆகியோர் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை.
பந்துவீச்சில் ஹசன் அலி 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
345 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM