கேகாலை - கரடுபன வீதியில் அடையாளந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தொடர்பான எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்னது.

எனினும் மீட்கப்பட்ட பெண் 35 தொடக்கம் 40 வயதுக்கிடைப்பட்டவராக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண்ணின் சடலம் கேகாலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.