நாட்டின் 12 மாவட்டங்களில் கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்!

Published By: Digital Desk 3

10 Oct, 2023 | 03:29 PM
image

நாட்டின் 12 மாவட்டங்களில் கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தினால்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை, கேகாலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் பலத்த மின்னலுடனும் இடிமுழக்கத்துடனும் கூடிய மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்  வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்: 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பொதுமக்கள் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம் ஆலோசனை வழங்குகின்றது.

• திறந்தவெளிகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளவும். மரங்களின் கீழ் ஒருபோதும் நிற்க வேண்டாம்.

• இடி முழக்கத்தின் போது நெல்வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், திறந்த நீர்நிலைகள் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும்.

• இடி முழக்கத்தின் போது கம்பித்தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின்னிணைப்பிலுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

• துவிச்சக்கர வண்டிகள், உழவியந்திரங்கள், படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

• விழக்கூடிய மற்றும் விழுந்த மரங்கள், மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.

• அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதிக்கப்பட்ட தரப்பிடம் எமது பணிகளை கொண்டு...

2024-07-19 16:21:12
news-image

யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பஸ் திருகோணமலையில்...

2024-07-19 19:58:48
news-image

வவுனியாவில் உடைந்து வீழ்ந்த வீடு! அதிஸ்டவசமாக...

2024-07-19 18:30:03
news-image

ஜனாதிபதியின் சூழ்ச்சிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அகப்பட...

2024-07-19 18:25:02
news-image

மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

2024-07-19 19:57:08
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அவுஸ்திரேலியாவின் முன்னாள்...

2024-07-19 17:36:02
news-image

முள்ளிவாய்க்காலில் வீட்டில் உறங்கியவர்களை மயக்கத்தில் ஆழ்த்தி...

2024-07-19 17:35:06
news-image

மூதூர் யுவதி கொலை : சந்தேக...

2024-07-19 17:28:46
news-image

22வது திருத்தம் குறித்த வர்த்தமானி ஜனாதிபதி...

2024-07-19 17:15:58
news-image

மனித மூலதன அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக...

2024-07-19 17:34:54
news-image

ஜனாதிபதியின் செயற்றிட்டம் தொடர்பில் போலியான அறிக்கைகளை...

2024-07-19 16:42:29
news-image

42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2024-07-19 17:15:54