மார்பக புற்றுநோய் சத்திர சிகிச்சையில் அறிமுகமாகி இருக்கும் ஸ்கின் ஸ்பேரிங் மாஸ்டெக்டோமி எனும் நவீன சத்திர சிகிச்சை

10 Oct, 2023 | 04:55 PM
image

இன்றைய திகதியில் பெண்மணிகளுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதனை தொடக்க நிலையில் கண்டறிந்தால் மார்பகத்தை பாதுகாக்கும் வகையிலான சத்திர சிகிச்சையை மேற்கொண்டு மார்பகத்தில் இருக்கும் புற்றுநோய் கட்டிகளை மட்டும் அகற்றும் பிரத்யேக சத்திர சிகிச்சையை செய்து கொள்ள இயலும். ஆனால் எம்மில் பலரும் புற்றுநோய் பாதிப்பு வளர்ச்சி அடைந்த பிறகு தான் சிகிச்சைக்காக மருத்துவ நிபுணர்களை சந்திப்பதால், அவர்களின் மார்பகத்தை முழுவதுமாக அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் மார்பக புற்றுநோய்க்கான சத்திர சிகிச்சையில் ஸ்கின் ஸ்பேரிங் மாஸ்டெக்டோமி எனப்படும் மார்பகத்தின் தோலை பாதுகாக்கும் பிரத்யேக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவாக மார்பக புற்று நோய் ஏற்பட்டு, அதற்காக சத்திர சிகிச்சை செய்து கொண்ட பிறகு அவர்களுடைய மார்பகப் பகுதி அகற்றப்பட்டிருப்பதால், தோள்பட்டை பகுதிகளில் வலியும், மாற்றமும் இருக்கும். இதனை இயன்முறை சிகிச்சை மூலம் தொடர்ந்து பயிற்சி பெற்று அதனை சீராக பராமரிக்க வேண்டும். வேறு சிலருக்கு மார்பகத்துடன் அக்குள் பகுதியில் இருக்கும் நிண நீர் முடிச்சுகளும் அகற்றப்படுவதால், அங்கும் வலியும், மாற்றமும் இருக்கும். பெரும்பாலான பெண்மணிகளுக்கு இதன் போதும் இயன்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டு அதனை சீராக பராமரிப்பதற்கான வழிமுறைகள் கற்பிக்கப்படுகிறது.‌ சில பெண்மணிகளுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக மார்பகம் அகற்றப்பட்டிருந்தால்... அவர்கள் அந்த சத்திர சிகிச்சைக்கு பின்னராக சமூகத்துடன் தொடர்பு கொள்வதில் உளவியல் தடைகள் ஏற்படக்கூடும். இதனை மாற்றி அமைப்பதற்காக தற்போது சந்தையில் செயற்கை மார்பகங்கள் கிடைக்கின்றன. அதனை பொருத்திக் கொண்டு உளவியல் தடையை அகற்றிக் கொள்ளலாம்.

இந்நிலையில் இந்நிலையில் மார்பகத்தின் தோல்பகுதியை பத்திரமாக பாதுகாக்கும் ஸ்கின் ஸ்பேரிங் மாஸ்டெக்டோமி எனும் சத்திர சிகிச்சை பெண்மணிகளிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் போது அவர்களுடைய இயற்கையான தோல் பாதுகாக்கப்படுவதால், சத்திர சிகிச்சைக்கு பிறகு அவர்கள் உளவியல் ரீதியான தடையை எதிர்கொள்ளாமல் இயல்பாக மற்றவர்களுடன் பழகுகிறார்கள்.

டொக்டர் சுஜாய்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right