கால்பந்தாட்டப் போட்டிகளை பெண்கள் காண்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறி, ஆண் வேடத்தில் மைதானத்திற்குள் நுழைந்த சில பெண்களை, அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் ஈரானில் பதிவாகியுள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில், பிரபலமான இரண்டு அணிகள் விளையாடிய, கால்பந்தாட்டப் போட்டியை பார்ப்பதற்கு முயன்ற எட்டு பெண்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளது.

ஈரானில் 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி நடைபெற்றதிலிருந்து கால்பந்தாட்டப் போட்டிகளையும், பிற விளையாட்டு நிகழ்ச்சிகளையும், அந்நாட்டு பெண்கள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.