நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ்- இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'மாமதுர..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநரும், தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.
இதில் ராகவா லோரன்ஸ், எஸ். ஜே. சூர்யா, நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ, சத்யன், அரவிந்த் ஆகாஷ், இளவரசு, பவா செல்லத்துரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். திரு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஃபைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் மற்றும் இன்வீனியோ ஒரிஜின் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம் எஸ் கதிரேசன் அலங்கார்பாண்டியன் ஆகியோர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'மாமதுர அன்னக்கொடி...' எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கும் இந்த பாடலை பின்னணி பாடகி தீ மற்றும் இசையமைப்பாளரும், பாடகருமான சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். துள்ளல் இசை பாணியில் அமைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பங்கு பற்றினர். அதன் போது படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், '' பேட்ட படத்திற்குப் பிறகு இந்தப் படத்தின் வெற்றியை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தைப் பற்றி நான் அதிகம் பேச மாட்டேன். இந்த கதையை பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று நம்புகிறேன்.'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM