இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அண்மையில் தனது வருடாந்த ‘Huawei விளையாட்டுத் தின’ நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வுடன் ஒன்றியதாக ஏககாலத்தில் மவுண்ட் லவேனியா ஹோட்டலில் விருதுகள் இரவு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Huawei ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றைப் பாராட்டும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் ‘Huawei மேலதிகாரிகள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் சிங்கர் முகவர் விற்பனைப் பிரதிநிதிகள் மற்றும் பிராந்திய ஊக்குவிப்பு அதிகாரிகளுக்கு இந்நிகழ்வில் இனங்காணல் அங்கீகாரத்துடன் விருதுகளும் வழங்கப்பட்டன.

250 வரையான உறுப்பினர்கள் பங்குபற்றிய ‘Huawei விளையாட்டுத் தினத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இடைத்தொடர்பாடல்கள் செயற்பாடுகள் உள்ளடங்கியிருந்தன.

நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் நிறுவனத்தின் அனைத்து பிரதான வர்த்தக பிராந்தியங்கள் வாரியாக 7 அணிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.