இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டிகளை தொகுத்து வழங்க சென்ற பாகிஸ்தான் பெண் கிரிக்கெட் வர்ணணையாளரான ஜைனப் அப்பாஸை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டிகளை தொகுத்து வழங்கும், சர்வதேச கிரிக்கெட் சபையில் (ஐ.சி.சி.,) குழுவில் பாகிஸ்தானின் ஜைய்னாப் அபாஸ் இடம் பெற்றிருந்தார்.
இதற்காக கடந்த வாரம் இந்தியா வந்தார். இவர் ஐதராபாத்தில் பாகிஸ்தான்–நெதர்லாந்து பங்கேற்ற போட்டியை தொகுத்து வழங்கினார்.
அடுத்து இன்று நடக்கும் போட்டியில் பணியாற்ற இருந்தார். தவிர பெங்களூரு, சென்னை, ஆமதாபாத்திற்கும் செல்ல இருந்தார்.
ஆனால் இந்தியாவுக்கு எதிராக இணையதளங்களில், இவர் முன்பு தெரிவித்த கருத்துகள் வெளியாகின.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், அவர் இந்தியாவை விட்டு துபாய் சென்றுவிட்டார் எனவும் வட்டாரங்கள் தெரிவித்தன
பாகிஸ்தான் கிரிக்கெட் வர்ணணையாளரார் மீது இந்திய வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், நாடு கடத்தப்பட்டதாக வெளியாகிய செய்தியை மறுத்த ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,‘‘ ஜைய்னாப் நாடு கடத்தப்படவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகத் தான் அவர் பாகிஸ்தான் திரும்பியுள்ளார்,’ என தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM