இலங்கையின் பிரதான விமான நிலையமான கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் 22 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று திங்கட்கிழமை (09)தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
10 பில்லியன் ரூபா இலாபத்தின் ஒரு பகுதி ஏற்கனவே தேசிய திறைசேரிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பயணிகள் போக்குவரத்து அதிகரித்துள்ளதாகவும் இது விமான நிலையத்தின் நிதிச் சொத்துக்களுக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆகஸ்ட் மாதம் 650 ஆயிரம் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளது.
இதற்கிடையில், மத்தள விமான நிலையத்திற்கு சாத்தியமான முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
விமான நிலையத்தின் செயல்பாட்டு இழப்புகளை தீவிரமாகக் குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் விமான நிலையத்தின் செயல்பாட்டுக்கள் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் நிதி ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM