இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடி தொழிலில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்ற பிரதமரின் கருத்துக்கு சிறிதரன் பதில்

Published By: Vishnu

10 Oct, 2023 | 12:46 PM
image

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடி தொழிலில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்ற பிரதமரின் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்றையதினம் பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

யுத்தத்துக்கு முன்னும் பின்னரும்  இந்தியாவின் ரோலர் படகுகள் பவளப்பாறை உட்பட மீன் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வடபகுதியில் உள்ள மீனவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். 

கச்சதீவில் கூட சுதந்திரமாக சென்று மீன் பிடிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், நெடுந்தீவு கடப்பரப்பில் கூட மீன் உற்பத்தியில் பெரும்  வீழ்ச்சிகண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதன் காரணமாக மீனவ குடும்பங்கள் தமது இலக்கை அடைய முடியாத நிலையில் காணப்படுகின்றதாகவும் தெரிவித்தார்.

தொழில் புரியும் பகுதிகள் அட்டைப்பண்ணைக்கு வழங்கப்பட்டு மீன் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளதாகவும், இந்த நிலையில் தமிழக சகோதரர்களுக்கு அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தமிழக மீனவர்களையும் இலங்கையில் உள்ள வடபகுதி தமிழ் மீனவர்களையும் அடி பட வைத்து தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான ஒரு விரிசலை உருவாக்கும் நோக்கிலும், இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியா தமிழர்களுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவை அறுத்தறியும் நோக்கில் நரி தந்திரபாயங்களில் ரணில் மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் கருணாவை பிரித்தது போல தற்பொழுது இருக்கின்ற தமிழ் கட்சிகளைப் பிரிக்கின்றது போன்று ஜனாதிபதி ரணில் செயற்பட்டு வருகின்றார். 

எங்களுக்கு ஆதரவு தரக்கூடியவர்கள் மற்றும் எங்களோடு சேர்ந்து வரக்கூடிய அனைவரையுமே பிரித்து அவர்களுக்கிடையே கசப்பான உணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கிலே செயல்பட்டு வருகின்றார் எனவும், இந்திய மீனவர்களுக்கு எடுத்துரைத்து எங்களுடைய கடற்பரப்பில் எங்களுடைய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு இடையூறளிக்க வேண்டாம் என அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கின

2026-07-19 14:41:39
news-image

நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் VietJet...

2026-07-19 13:45:42
news-image

செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டு சுற்றுலாப்...

2026-07-19 13:20:56
news-image

 "நவீன மனித சமுதாயத்தில் ஆன்மீகம் புறக்கணிக்கப்படுகிறது"...

2026-07-19 13:00:13
news-image

நட்சத்திர ஹோட்டல் என்ற போர்வையில் சிமெந்து...

2026-07-19 12:25:28
news-image

ஹொரணையில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும்...

2026-07-19 12:00:16
news-image

சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி...

2026-07-19 13:48:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா ;...

2026-07-19 12:18:02
news-image

யாழில் கடல் அட்டைப் பண்ணைகள் மூலம்...

2026-07-19 11:25:26
news-image

வங்காள விரிகுடா பிராந்திய பாதுகாப்பு ஒரு...

2026-07-19 11:04:09
news-image

நீதியரசர்களின் ஓய்வு வயது நீடிப்புக்கு எதிர்ப்பு...

2026-07-19 10:59:08
news-image

இந்திய - இலங்கை பாதுகாப்பு செயலாளர்களின்...

2026-07-19 10:42:19