“வன்முறை ஒருபோதும் தீர்வு தராது” பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்- காங்கிரஸ்

10 Oct, 2023 | 11:51 AM
image

பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். எந்தவொரு வன்முறையும் ஒருபோதும் தீர்வை வழங்காது. எனவே போர் நிறுத்தப்பட வேண்டும்என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின்போது இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலைத் தீர்க்க பேச்சுவார்த்தையே சரியான தீர்வு என்று வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேல் மக்கள் மீதான மிருகத்தனமான தாக்குதல்களை இந்திய தேசிய காங்கிரஸ் கண்டிக்கிறது. இஸ்ரேலிய மக்களின் நியாயமான பாதுகாப்பு நலன்களை உறுதி செய்யும் அதேவேளையில் சுயமரியாதை, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். எந்தவொரு வன்முறையும் ஒருபோதும் தீர்வை வழங்காது. எனவே, போர் நிறுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, இஸ்ரேல் மீதான ஹமாஸ் குழு தாக்குதலை "பயங்கரவாத தாக்குதல்கள்" என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் எனவும் அறிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர்...

2024-06-12 18:00:38
news-image

தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த...

2024-06-12 15:09:56
news-image

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

2024-06-12 14:53:54
news-image

ஒடிசா மாநில முதல்வராக மோகன் சரண்...

2024-06-12 20:19:49
news-image

குவைத்தில் தீவிபத்து - 35 பேர்...

2024-06-12 13:56:57
news-image

மகனிற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை...

2024-06-12 12:55:38
news-image

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய...

2024-06-12 12:36:08
news-image

போர்க்களங்களில் -உள்நாட்டு மோதல்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை...

2024-06-12 12:12:36
news-image

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா: திபெத்தில்...

2024-06-12 11:07:26
news-image

போதைப்பொருளிற்கு அடிமையானவர் துப்பாக்கியை கொள்வனவு செய்த...

2024-06-11 21:46:47
news-image

மலாவியின் துணை ஜனாதிபதி விமானவிபத்தில் பலி

2024-06-11 17:49:44
news-image

விவசாயிகளின் நிதி உதவிக்கான திட்டத்தில் கைசாத்திட்டார்...

2024-06-11 19:09:33