மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சூடு பத்தின சேனை வயல் வெளி பிரதேசத்தில் பிரசவித்து சில மணி நேரங்களில் தாய் யானையினால் கைவிடப்பட்ட யானைக் குட்டி ஒன்றினை பொது மக்கள் காப்பாற்றியுள்ளனர்.

நேற்று இரவு (14) மேற்படி வயல் வெளி பிரதேசத்திற்கு உணவிற்காக வந்த யானைக் கூட்டங்களில் காணப்பட்ட பெண் யானை அந்த இடத்திலேயே குட்டியை பிரசவித்துள்ளது.

இன்று அதிகாலை வயலுக்கு சென்ற விவசாயிகள் அதனை கண்னுற்றுள்ளனர்.

காலை பொழுது விடிந்ததும் சன நடமாட்டம் காரணமாக குட்டியினை தம்முடன் அழைத்துச்செல்ல முடியாமல் கைவிட்டுச் சென்றுள்ளதாக பிரதேசத்தின் விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். 

குட்டியினை பாதுகாக்கும் முகமாக மாவட்டத்தின் வன ஜிவராசிகள் திணைக்களத்திற்கு  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.