மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொல்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குருணாகல் – பொல்கஹவெல பிரதான வீதியின் புஹுரிய சந்தியில் இடம்பெற்றுள்ளது.
45 வயதுடைய பொல்கஹவெல பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது
நேற்று திங்கட்கிழமை (09) இரவு இந்த கான்ஸ்டபிள் வாகனங்களையும் மக்களையும் சோதனை செய்து கொண்டிருந்தபோது, கந்தளாயிலிருந்து கடுவலைக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த கான்ஸ்டபிள் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரான டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM