இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி நிர்வாகத்தை கையாள ஐவர் கொண்ட குழு

Published By: Priyatharshan

05 Jan, 2016 | 10:09 AM
image

இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் நிதி நிர்­வா­கத்தை கையாள ஐந்து பேர் கொண்ட குழு­வொன்று நிய­மிக்க தீர்­மா னம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை கிரிக்­கெட்டின் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர் திலங்க சும­தி­பால தலை­மை­யி­லான புதிய நிர்­வாக குழு நேற்று கட­மை­களைப் பொறுப்­பேற்­றது. இந்­நி­கழ்­விற்கு விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர மற்றும் விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் ஹரிஸ் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர்.

கட­மை­களைப் பொறுப்­பேற்ற புதிய நிர்­வாகக் குழு­வினர் நேற்­றைய தினமே ஒரு சில தீர்­மா­னங்­க­ளையும் எடுத்­துள்­ளனர். இதன்­போது தீர்­மா­னங்கள் குறித்து ஊட­கங்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டது. அதில் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யுடன் செயற்­பட தலைவர் திலங்க சும­தி­பா­லவும் பிரதித் தலைவர் ஜயந்த தர்­ம­தா­சவும் நியமிக்­கப்­பட்­டுள்­ளனர். அதேபோல் ஆசிய கிரிக்கெட் சங்­கத்­துடன் செயற்­பட திலங்க சும­தி­பா­லவும் மொஹான் சம­ர­நா­யக்­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­தோடு நிதி நிர்­வா­கத்தைக் கையாள ஐந்து பேர்­கொண்ட குழு­வொன்று அமைக்­கப்­ப­டு­கி­றது. அதில் ஒரு­வரை இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னமும்இ ஒரு­வரை விளை­யாட்­டுத்­துறை அமைச்சும்இ ஒரு­வரை நிதி அமைச்சும்இ இன்­னொ­ரு­வரை இலங்கை கணக்­கியல் நிறு­வ­னமும்இ ஐந்­தா­ம­வரை இலங்­கை­யி­லுள்ள அனைத்து கிரிக்கெட் கழகங்­களும் சேர்ந்து நிய­மிக்கும்.

இந்தத் தீர்­மா­னங்கள் அனைத்­தையும் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ருக்கு தெளிவு­ப­டுத்­தி­யுள்ளோம். அவ­ரும் இதற்கு அனு­ம­தி­ய­ளித்­துள்­ள­தாக திலங்க சும­தி­பால தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10
news-image

நியூட்டனின் சகலதுறை ஆட்டத்தால் 2ஆம் அடுக்கு...

2025-03-14 14:08:12
news-image

அவிஷ்க, கவின், அசலன்க ஆகியோரின் அபார...

2025-03-13 19:45:02
news-image

கண்டி அணிக்கு எதிரான போட்டியில் பலமான...

2025-03-13 19:00:12
news-image

மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை ஐசிசி...

2025-03-13 16:16:47
news-image

நஞ்சிங் உலக மெய்வல்லுநர் உள்ளக அரங்க...

2025-03-14 13:39:02
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: சங்கா சதம்...

2025-03-12 17:16:17